
நடிகர் - நடிகைகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதோ டிசம்பர் 5-ல் படப்பிடிப்பு துவக்கம்.
டெல்லியில் உள்ள டெக்ராடூனில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
இந்தியில் அமீர்கான் நடித்த ரோலில் விஜய்; மாதவன் கதாப்பாத்திரத்தில் ஜீவா; சர்மன் ஜோஷி ரோலில் ஸ்ரீகாந்த்... தமிழின் கரினா கபூர் - இலியானா!
படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான போமன் இரானி நடித்த பேராசிரியர் ரோலில் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டவர், சத்யராஜ்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிக்கிறது.
தமிழ் 3 இடியட்ஸுக்கு துரிதமாக இயங்கியிருப்பவரே ஹாரிஸ் தான். படத்தின் முதல் பாடலை ஷங்கரிடம் தந்துவிட்டதாக டிவீட்டியிருக்கிறார் அவர்.
தெலுங்கில் அமீர்கான் ரோலில் மகேஷ் பாபு, அங்கும் இலியானாதான் கரீனா!
எல்லாம் ரெடி... ஆனால், 3 இடியட்ஸ் தமிழ்ப் பதிப்பின் தலைப்பு?!
காத்திருக்கச் சொல்கிறது, படக்குழு!
0 comments:
Post a Comment