![]() நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் காலடி எடுத்து வைத்த விஜய் ஆன்ட்டனி அந்த படத்தை முடிப்பதற்குள் கைநழுவி போனது ஏராளமான படங்கள். சரி, அதையெல்லாம் தியாகம் செய்து விட்டு நடித்த படம் எப்போது ரிலீஸ்? அதை தெளிவாக சொல்ல முடியாதளவுக்கு இருக்கிறதாம் அப்படத்தின் வியாபாரம். விட்டத்தை பார்த்துகிட்டு இருந்தா விட்டதை பிடிக்க முடியுமா? மீண்டும் பழைய வேகத்தில் படங்களுக்கு இசையமைக்கப் போகிறாராம். இந்த நேரத்தில்தான் விஜய் ஆன்ட்டனி தேடிய மாதிரி முழு வாஸ்த்துடன் கூடிய பங்களா கிடைத்திருக்கிறது அவருக்கு. சாலிகிராமம் வீட்டிலிருந்து நடிகர் விஜய் நீலாங்கரை பங்களாவுக்கு போய்விட்டார். இங்கு இருந்தபோது அவர் பெற்ற தொடர் வெற்றிகள் நீலாங்கரைக்கு போனபின் இல்லை. இந்த விஷயத்தை விஜய் நம்புகிறாரோ இல்லையோ, விஜய் ஆன்ட்டனி நம்புகிறார். தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டுக்கு தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை மாற்றிவிட்டார் |
0 comments:
Post a Comment