Friday, January 13, 2012

ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் பிரமாண்ட ரிலீஸ்


ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.
பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.
சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.
காரணம்… இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்பார்களோ என்ற தயக்கம்தான். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பெரும் வெற்றியைக் குவித்தது. வசூலும் பிரமிக்க வைத்தது.
ஆனால் தமிழில் இந்த மாதிரி கதைகள் எப்படி வரவேற்கப்படும் என கணிக்க முடியாத நிலை. அதனால் அமைதி காத்தனர். இதற்கிடையில், 3 இடியட்ஸுக்கு அடுத்து பெரும் வசூல் குவித்த படம் என இந்தியில் கொண்டாடப்பட்ட தபாங் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியாகி குப்புற கவிழ்ந்துபோனது.
எனவே படம் குறித்து எதுவும் சொல்லாமல், மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம் என அமைதியாகிவிட்டது ஷங்கர் அண்ட் கோ.

0 comments:

Post a Comment