Sunday, January 22, 2012

நண்பன் பற்றி இளையதளபதி விஜய் பேட்டி


நான் நடிக்கும் திரைப்படங்களில் தேவையில்லாமல் அதிரடியான பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன் என்று நண்பன் நாயகன் விஜய் பேட்டியளித்துள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் நடித்து திரையரங்குகளில் நண்பன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நண்பன் திரைப்படத்தைப் பற்றி இளையதளபதி விஜய், நண்பன் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. எனது முந்தைய படங்களை விட வசூலில் சாதனை படைப்பதாக தகவல் வருகிறது.
பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் பார்த்த பிறகே நண்பனில் நடிக்க விரும்பினேன். நண்பனில் பஞ்ச் வசனங்களோ அதிரடி சண்டை காட்சிகளோ கிடையாது. என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன்.
அது நண்பன் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. என் படங்களில் தேவையில்லாத பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். நண்பன் மூலம் ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோர் நண்பர்களாகி விட்டனர்.
தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும்.
எனது அப்பா என்னை வைத்தியராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கட்டில் ஆர்வம் இருப்பதால் அவனை கிரிக்கட்டிற்கு அனுப்ப முயற்சி செய்வேன்.
தற்போது துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமாணத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வர் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

1 comments:

Post a Comment