Tuesday, January 17, 2012

வேட்டையும் நண்பனும்

பொங்கல் விடுமுறைக்கு விஜய் நடிக்கும் நண்பன், மாதவன், ஆர்யா நடிக்கும் வேட்டை என இரண்டு படங்கள் வெளியாகின. அப்படங்கள் குறித்து ஒரு பார்வை:

நண்பன் : ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.

12, 13 உள்ளிட்ட தேதிகளில் எந்த படமும் வெளியாகாததால் 'நண்பன்' படம் தமிழகம் முழுவதும் பல
 தியேட்டர்களில் அரங்கு
 நிறைந்த காட்சிகளாக நன்றாக கல்லா கட்டியது.

வழக்கமான மாஸ் படத்தினை போல இல்லாமல் விஜய்யின்
எதார்த்தமான நடிப்பு, ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கம்,
 இந்தியில் வரவேற்பைப் பெற்ற கதை என
 படம் பார்க்க வரும் ரசிகர்களை நண்பனாக்கி இருக்கிறது 'நண்பன்'.

வேட்டை : மாதவன், ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி
இருக்கும் படம். 'ரன்', 'பையா' படத்தினை போல, இளமைத் துள்ளலுடன்
திரைக்கதை அமைத்து  இருக்கிறார் லிங்குசாமி.

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிப்பு, லிங்குசாமி வேகமான திரைக்கதை அமைப்பு உள்ளிட்டவை படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

ரசிகர்களை மனதை வேட்டையாடி வருகிறது 'வேட்டை'. இதுவரை தாவணியில் வலம் வந்த அமலா பால், இப்படத்தில் 'கட்டிப்புடி என்னை கட்டிப்புடி' பாடலில் கவர்ச்சிகரமான உடைகளில் ஆடியிருக்கிறார்.

'நண்பன்' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, 'வேட்டை' படத்திற்கு யு.டிவி
நிறுவனத்தின் விளம்பர யுத்தி, இரண்டு படங்களுக்குமே அரசாங்கத்தில்
 இருந்து கிடைத்த வரி விலக்கு என  தமிழ் திரையுலகத்திற்கு  2012 
நல்லதொரு தொடக்கமாக அமைந்து இருக்கிறது

0 comments:

Post a Comment