செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற கர்நாடகா புல்டோசர்ஸ் முதலில் பந்து வீசியது. சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் 19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
பந்து வீசும் சிவா
கன்னட தாரா, சுமலதா.
தம்ப்ஸ் அப் காட்டுகிறார் சமீரா ரெட்டி
எதிர்பார்ப்புடன் சோனியா அகர்வால்.
பேட்டி கொடுக்கிறார் விஷால். உடன் ராதிகா.
சீரியஸ் மூடில் ஜீவா.
கேரளா வெற்றிபெறாதா என்று வேண்டிக் கொள்ளும் பாவனாவுடன் லிசி பிரியதர்ஷன்
ரசிகர்களை கலகலக்க வைத்த வெங்கடேஷ்
கேரள அணி விக்ரம் சிங்குக்கு ஆறுதல் கூறுகிறார், ரியல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
கிளுகிளுப்பில் லஷ்மி ராய்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தெலுங்கு வாரியர்ஸ்
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாசில் வென்ற தெலுகு வாரியர்ஸ் முதலில் பந்து வீசியது.
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்தது. தொடக்க வீரர் நிவின் பாலி ஆட்டமிழக்காமல் 46 ரன், கேப்டன் ராஜிவ் பிள்ளை 16, பிரஜோத் கலாபவன் 12 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து வென்றது. ஆதர்ஷ் 52, தருண் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.











0 comments:
Post a Comment