| தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. |
தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன. இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர்.நண்பன், பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். நண்பன், வேட்டை ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கல் தின கொண்டாட்டமாக தமிழ்நாட்டில் திரையிடப்படுகிறது. வருகிற 12 ம் திகதி சென்னையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நண்பன், வேட்டை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. |

இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர்.





0 comments:
Post a Comment