Wednesday, July 6, 2011

பாடசாலைக்குச் சென்ற விஜய்

விஜய் இறுதியாக அல்மா மற்றர் மெற்றிகுலேசன் பாடசாலைக்கு சென்றுள்ளார். இது சென்னையில் உள்ள விருதம்பாக்கம் என்னும் இடத்தில் உள்ளது. விஜய் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார். இது விஜய்க்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது விஜய் தனக்கு படிப்பித்த ஆசிரியர்களையும் வகுப்பறைகளையும் சென்று பார்வையிட்டு தனது பள்ளி வாழ்க்கையை ஞாபகப்படுத்திக்கொண்டார். விஜய் நண்பன் படத்தில் கல்லூரிமாணவனாக நடிப்பது முக்கியமானதாகும். மேலும் ஒரு நாட்டின் எதிர்காலம் ஒரு வகுப்பறையாக இருக்கிறது நான் கல்லுரிக்கு சென்று இதனை அவதானித்தேன் எல்லாமாணவர்களும் சந்தோசமாக இருக்கிறார்கள் நான் பாடசாலைக்கு வர அனுமதி கொடுத்த அதிபர் மீனா சுரேஸுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன் என்று விஜய் கூறினார்.அதிபர் இது பற்றிக்கூறிய போது விஜய் இந்த பாடசாலையில் படிக்கும் போது ஆசிரியராக இருந்தேன்  அவருக்கு ஆறாம் வகுப்பில் நான் ஆங்கிலம் படிப்பித்தேன் விஜய் மிகவும் அமைதியானவர் போட்டிகளிலும் விளையாட்டுகளிலும் அதிக ஈடுபாட்டுடன் பங்கு பற்றுவார் எனக்கூறினார்.

0 comments:

Post a Comment