Friday, July 15, 2011

கணக்கு தீர்க்க தயாராகும் காவலன் -விஜய் தரப்போகும் புகார்?

காலில் கொத்தினால் மண்டைக்கு விஷம் ஏற லேட்டாகும் என்பதால் நேரடியாக மண்டையிலேயே கொத்தும் வேலை ஆரம்பாகிவிட்டது. ஒரு ராஜ நாகமாக படமெடுத்து நிற்கிறார் நடிகர் விஜய். கொத்தப் போவது ஏன்? கொத்தப்படப் போவதுKavalanயார், யார்? இந்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்கும் விடைதான் இந்த கட்டுரை.
கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று அதிமுக்கியமான விளைவை ஏற்படுத்தியது நாட்டில். இதை படித்த அவரது ரசிகர்கள் கொதித்தனர். நன்றாக கவனிக்கவும். இது தேர்தலுக்கு முன்பாக விஜய் கொடுத்த ஆக்ரோஷ பேட்டி. அதில் அவர் கூறியிருந்த மிக முக்கியமான விஷயம் இதுதான்.
'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்' படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப்பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ்நிலையைச் சொல்ல முடியாது.
'காவலன்' படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்' படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!
வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்' படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!'' குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்'னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?
முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒருKavalanபடத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்' வந்தான்.
யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.
இந்த பேட்டியின் கடைசிவரிகள்தான் ரொம்ப முக்கியமானது. நான் சொல்லிட்டேன், பல பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க என்றாரல்லவா? அந்த பல பேர்தான் இன்று சன் டிவிக்கு எதிராக புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
காவலன் ரிலீஸ் நேரத்தில் நடந்ததை மிக சுருக்கமாக நம்மிடம் விவரித்தார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு திரைப்பட விநியோகஸ்தர். பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார்கள். அதே நேரத்தில்தான் ஆடுகளம் படத்தையும் வெளியிட முடிவு செய்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நேரத்தில் விஜய் படம் வெளிவந்தால், ஆடுகளத்தின் ஓப்பனிங் பாதிக்கப்படும் என்பதால் சில மறைமுக காரியங்களை செய்ய ஆரம்பித்தாராம் சக்சேனா.
காவலன் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்பே இவரது டீம் தயாரானதாம். இந்த படத்தின் எப்எம்எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருந்த தந்திரன் பிலிம்ஸ் அதிபர் கடத்தப்பட்டார். அவரை மிரட்டி தனது பெயருக்கு இந்த உரிமையை மாற்றிக் கொண்டாராம் சாக்சின் பினாமியான அய்யப்பன். தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான இவர், ஒரு படம் வெளிவர உதவுவதற்கு பதிலாக அதை வெளியிட விடாமல் செய்யும் வேலையை ஆரம்பித்த கொடுமையும் நடந்தது.
நீதிமன்றத்தை அணுகிய அய்யப்பன், ஏதேதோ காரணங்களை குறிப்பிட்டதுடன், காவலன் படத்தை இரண்டு வாரங்கள் கழித்து வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாராம் மனுவில். இங்கேதான் ஆரம்பித்தது பிரச்சனை.
ஒரே ஒரு ஏரியாவில் படம் வெளியாவதில் பிரச்சனை என்றாலும் ஒட்டுமொத்த விநியோகஸ்தர்களும் படத்தை வாங்கவே அஞ்சுவார்கள். பணத்தை கட்டிய பின்பு படம் வெளிவராமல் போனால் என்னாவது என்ற அச்சம் வருமல்லவா? இந்த அச்சத்தை திட்டமிட்டு அவர்கள் மனதில் வரவழைத்தார் அய்யப்பன். இதை தொடர்ந்துதான் எல்லா குழப்பங்களும் ஆரம்பமாகினவாம். பிரசாத் என்ற பைனான்சியர் தனக்கு தர வேண்டிய பணத்தை தந்தாலே ஆச்சு என்று ஒற்றைகாலில் நின்றார். அல்லது அப்படி நிற்க வலியுறுத்தப்பட்டார். எப்.எம்.எஸ் பணத்தை அப்படியே இவருக்கு திருப்பிவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளருக்கு திடீரென்று நான்கு கோடியை புரட்டுவதில் சிக்கல் ஆரம்பித்தது.
இதுபோக படத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்த பல விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டார்களாம். திடீர் திடீரென்று அவர்களுக்கு யாரிடமிருந்தோ போன் வர, பிரசாத் லேபிலிருந்து மின்னலாக தெறித்தார்களாம் அவர்கள்.
இதற்கிடையில் சென்னை நரக விநியோக உரிமையை தனது நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி படம் வெளியாவதற்கு கடைசி நேரத்தில் உதவி செய்ய முன்வந்தாராம் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார். தனது பங்காக அவர் கொடுத்தது ஐம்பது லட்சம். தற்போது அதுவும் கைக்கு வராமல் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறாராம் இவர்.
இப்படியெல்லாம் பெரும் குழப்பம் நீடித்துக் கொண்டேயிருக்க, கடைசியில் விஜய் தரப்பிலிருந்து சில கோடிகளை கொடுத்தால் காவலன் வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது நள்ளிரவை தாண்டியிருந்ததாம் நேரம். சரி, நானே பணம் கொடுக்க முன்வருகிறேன் என்று கூறிய விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி சுமார் மூன்று கோடிக்கு செக் தர முன்வந்தார். முதலில் அதை ஏற்றுக் கொள்வதாக கூறியதாம் பிரசாத் லேப் நிர்வாகம். அப்புறம் யாரிமிருந்தோ ஒரு போன் கால் வர, அந்த மூணு கோடியை பணமா கொடுத்திருங்க என்றார்களாம். நள்ளிரவில் அவ்வளவு கரன்சிக்கு எங்கே போவது? எங்கெங்கோ அலைந்து பணத்தை புரட்டிக் கொண்டிருந்தார்களாம் விடிய விடிய.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே பா.விஜய் நடித்து கலைஞர் கதை வசனத்தில் உருவான இளைஞன் படத்தை எவ்வித டெபாசிட்டும் இல்லாமல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்கிற ஆடித்தள்ளுபடியை ஆரம்பித்தது இதே குரூப்பின் மூளை. தமிழ்நாட்டிலிருக்கும் நல்ல நல்ல தியேட்டர்களை எல்லாம் ஆடுகளமும், 'இலவச' இளைஞனும் பிடித்துக் கொள்ள, கையை பிசைந்து கொண்டிருந்தது காவலன்.
இந்த குடைச்சல் போதாதென்று இன்னொரு அதிர்ச்சிகரமான வேலையை செய்து கொண்டிருந்தது சன் டி.வியின் ஊடகங்கள். காவலன் ரிலீசில் தொடர்ந்து சிக்கல் என்று தினந்தோறும் செய்திகள் வாசிக்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் போஸ்டர் ஒட்டுவதா, வேண்டாமா என்ற குழப்பம் நிலவியது தியேட்டர்காரர்களிடம். ரசிகர்களும் கட் அவுட், பேனர் என்று எந்த முயற்சியிலும் இறங்க முடியாமல் குழம்பி போனார்கள்.
சன் குழுமம் தந்த மிகப்பெரிய அதிர்ச்சியே இதுதான் என்றார் காவலன் பட சிக்கலை நம்மிடம் சொல்லிக் கொண்டே வந்த அந்த விநியோகஸ்தர். எப்படியோ போராடி படத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். வெளியூர்களுக்கெல்லாம் பிளைட்டிலும் கார்களிலும் வைத்து மின்னலை போல டெலிவரி செய்யும் வேலைகள் ஆரம்பித்து விட்டன. இந்த விஷயம் நன்றாக தெரிந்த பிறகும், சன் டி.வி செய்திகளில் காவலன் இன்றும் ரிலீஸ் இல்லை என்று செய்தி பிளாஷ் நியூசாக ஓடியதுதான் விஜய்யை அதிர வைத்தது.
தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள் மீதும், தொழில் செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீதும் புகார் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறதாம் விஜய்யிடம். கடந்த சில தினங்களாக சட்ட நிபுணர்களை வீட்டுக்கே அழைத்து விவாதிக் கொண்டிருக்கிறாராம் அவர்.
முதல் மூன்று நாள் கலெக்ஷனே பல கோடிகள் வந்திருக்கும். அவற்றையெல்லாம் வரவிடாமல் தடுத்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதே சன் பிக்சர்ஸ்தான் என்று கோபம் கொண்டிருக்கிற விஜய் என்ன செய்யப் போகிறார்?
சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மீதும், சக்சேனா மீதும் புகார் கொடுக்கவிருக்கிறாராம். விஜய்யே நேரடியாக கமிஷனர் அலுவலகத்திற்கு வருகிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் அந்த விநியோகஸ்தர்.

1 comments:

Post a Comment