சிங்கம் படத்தின் வரவேற்பை அடுத்து ஹரி இயக்கி இருக்கும் படம் வேங்கை. தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
இப்படம் ஜுலை 7ம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படத்தை அடுத்து யார் படத்தை இயக்க இருக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் பேச்சு.
இந்நிலையில் ஹரி அடுத்து சூர்யாவை வைத்தே படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். சிங்கம் படத்தை போலவே இப்படத்திற்கும் வேகமான திரைக்கதை அமைக்க இருக்கிறாராம். இதற்காக 6 மாத காலம் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட இருக்கிறாராம்.
சூர்யா படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறாராம். அப்படம் கண்டிப்பாக விஜய்யின் ஆக்ஷ்ன் ஹீரோ இமேஜிற்கு தீனி போடுவது போல அமையுமாம்.
அதுமட்டுமன்றி அஜீத் தன்னிடம் படு வேகமான கதை ஒன்றை தனக்கு ஏற்றார் போல் அமைக்குமாறு ஹரியிடம் கூறி இருக்கிறாராம்.







0 comments:
Post a Comment