Wednesday, July 6, 2011

விஜயின் அடுத்த இயக்குனர்

 வேலாயுதம், நண்பன் படங்களில் நடித்து முடித்த பிறகு, தனது அடுத்த படத்தின் இயக்குனராக விஜய் யாரை தேர்வு செய்ய இருகிறார் என்ற கேள்வி கோடம்பாக்கத்தை குடைந்து எடுத்துக் கொண்டிருகிறது.
சீமான் சிறையில் இருந்தபோது செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய பகலவனில்தான் 100% நடிப்பார் என்கிறார்கள் சீமான் வட்டாரத்தில். இல்லை…! இல்லை..! இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்கிறார் பேரரசு வட்டாரத்தில். இந்த இரண்டுமே இல்லை… வருண் என்ற முதுமுக இயக்குனரின் அதிரடியான அரசியல் படத்தில் நடிக்க இருகிறார் என்ற தகவலும் விஜய் பி.ஆர்.ஓ வட்டாரத்தில் இருந்து கடந்த மூன்று மாதத்துக்கு முன்பே கசிந்தது.
தற்போது விஜயை யார் அடுத்து இயக்க இருகிறார் என்ற பட்டியலில் ஒரு அதிரடி இயக்குனரும் சேர்க்கப்பட்டிருகிறார் என்பது ஆச்சர்யம்! அவர் வேறு யாருமல்ல! தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள வேங்கை படத்தின் இயக்குனர் ஹரிதான்! வரிசையாக மாஸ் ஹீரோ படங்களை இயக்கி வரும் ஹரிக்கு ஃபாக்ஸ் ஆஃபீஸ் இயக்குனர் என்ற புகழ் உண்டு. ஹரி சூரியாவை வத்து இயக்கிய சிங்கம், வின்னைத்தாண்டி வருவாயா, கோ படங்களுக்கு இணையான வாசூல் சாதனையைப் படைத்தது. இதனால் ஹரி 4 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
தற்போது சூரியாவை வைத்து ஹரி மீண்டும் படம் இயக்க ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், விஜயிடமிருந்து ஹரிக்கு அழைப்பு பறந்ததாம். வேங்கை படத்தின் இறுதி கட்ட பணிகளுக்கு இடையில் விஜயை சந்தித்த ஹரியிடம், எனக்கு கைவசம் கதை இருகிறதா என்று கேட்டாராம். விஜய். அதற்கு ஹரியோ ஆறுமாதம் அவகாசம் கொடுங்கள் என்று சொல்ல விஜய் ஒகே சொல்லி விட்டார் என்கிறார்கள். தற்போது விஜய்க்காக ஹரி சொன்ன கதைக்கு, காட்சிகளை உருவாக்கும் பணிக்காக தீவிர  டிஸ்கஸனில் இருகிறதாம் ஹரியின் உதவியாளர்கள் டீம்

0 comments:

Post a Comment