Saturday, July 2, 2011

லிப் கிஸ் விஜய்... இம்ப்ரெஸ் உதயநிதி! - ஹன்ஸிகா சீக்ரெட்ஸ்


சின்ன குஷ்புபோல் இருந்த ஹன்சிகா, இப்போது ஸ்லிம் குஷ்பு.
'' 'எங்கேயும் காதல்’ படத்தில் ஜெயம் ரவியையே மறைக்கிற அளவுக்கு இருந்தீங்க. இப்போ மெலிஞ்ச மாதிரி தெரியுதே?''
''யெஸ் பாஸ்...  8 கிலோ குறைஞ்சிட்டேன். போன வருஷம் வாயை கன்ட்ரோல் பண்ண முடியாம கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன். அதான் குண்டாகிட்டேன். இந்த ஒரு வருஷமா டெய்லி ஜிம் போய், டயட்ல இருந்து வெயிட் டைக் குறைச்சிட்டேன். இப்போ ஜிம் போகா மத் தூங்குறதே இல்லை!''
'' 'வேலாயுதம்’ எப்படிப் போய்ட்டு இருக்கு?''
'' 'வேலாயுதம்’ படத்தில் கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். பாவாடை - தாவணிதான். இது எனக்கு ரொம்பவும் பிடிச்ச காஸ்ட்யூம். நான் நடிச்சதுலயே வேலாயுதம்தான் பிரமாண்டமான படம்!''
''விஜய் என்ன சொல்றார்?''
''படத்தில் ஒரு பாட்டு ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அந்தப் பாட்டு ஷூட் முடிஞ்ச உடனே விஜய் சார் சொன்ன கமென்ட்டை மறக்கவே முடியாது. 'பாட்டு முழுக்க நான் என்னைக் கவனிக்கவே இல்லை. உங்களைத்தான் பார்த்துட்டே இருந்தேன். அந்த அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க. இந்தப் பாட்டில் ஆடியன்ஸ் எல்லாரும் உங்களைத்தான் பார்ப்பாங்க’னு சொன்னார். அவர் வாயால் பாராட்டு வாங்கினது பெரிய விஷயம்!''
''நீங்களும் விஜய்யும் லிப் டு லிப் கிஸ் அடிக்கிற மாதிரி ஸ்டில்ஸ் வர ஆரம்பிச்சிருக்கே?''
''சத்தியமாக படத்தில் லிப் கிஸ் ஸீனே இல்லை. நான் விஜய்க்கு முத்தம் கொடுக்கவும் இல்லை. அது ஒரு கேமரா ஜிமிக். பாடல் காட்சியில் அவர் முகத்துக்குப் பக்கத்தில் என் முகத்தைக் கொண்டுபோனேன். அப்போ எடுத்த போட்டோ அது. பார்க்கிறதுக்கு முத்தம் கொடுத்த மாதிரி தெரியுதா?''
'' 'ஒரு கல்... ஒரு கண்ணாடி’ காமெடிப் படமாச்சே... அதில் உங்க ரோல் எப்படி இருக்கும்?''
''ராஜேஷ் டைரக்ட் பண்ணின ரெண்டு படங்களையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன். எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப்போலவே இதுவும் செம ஜாலியான படம். உதயநிதி, சந்தானம், நான்... எங்க மூணு பேரைச் சுத்தி நடக்கும் படம். படத்தில் என்னை அவர் இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணுவார். ஆனா, நான் கண்டுக் கவே மாட்டேன். படம் பாருங்க... செம ஜாலியா இருக்கும்!''
''உதயநிதி எப்படி நடிக்கிறார்?''
''உதயநிதியை அறிமுக நடிகர்னு சொல்லவே முடியாது. ஒவ்வொரு நாளும் பக்காவா ரிகர்சல் பண்ணிட்டு வர்றார். முதல்முறையா கேமரா முன்னாடி நிற்கும் கூச்சமே அவருக்கு இல்லை. செம புரொஃபஷனலா இருக்கார்!''
''மும்பை பொண்ணுங்க ரிலாக்ஸ் பண்ண பார்ட்டிக்குப் போவாங்க... நீங்க எப்படி?''
''ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி மசாஜ் பார்லருக்குப் போவேன். அவ்வளவுதான்!''
''வரவர கிளாமர் தூக்கலா இருக்கே?''
''நடிப்பு மாதிரியே கிளாமரும் ஹீரோயின் களுக்கு முக்கியமானது. கிளாமரான ரோல் என்றால் இழுத்துப் போர்த்திட்டா நடிக்க முடியும்?''
'' 'எங்கேயும் காதல்’ படத்தில் நீங்கள் சரியா நடிக்கலைனு பேசினாங்களே?''
''என்னை யாரும் கட்டாயப்படுத்தி சினிமாவுக்குக் கூட்டிட்டு வரலை. நான் விருப்பத்தோட நடிக்க வந்தேன். 19 வயசுக்குள் 15 படங்களில் நடிச்சு இருக்கேன். நடிக்கிறதுக்காக நான் சிரமப்படணும்னு அவசியமே இல்லை. இந்தியில் நான் நடித்த சீரியலுக்காக 14 விருதுகள் வாங்கி இருக்கேன். தெலுங்கில் நான் நடிச்ச 'தேச முத்ரா’வுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினேன். நடிக்காம எப்படி வாங்க முடியும்?''

0 comments:

Post a Comment