நடிகர்கள் - விஜய் ஜீவா சிறிகாந் இலியானா சத்தியராஜ் அனுஜா எஸ்.ஜே.சூர்யா ராகவா லாரன்ஸ் மற்றும் பலர்
இயக்கம் - சங்கர்
இசை - ஹரிஸ் ஜெயராஜ்
விஜய் சிறீகாந் ஜீவா ஆகியோர் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.இதில் மூவரும் சுட்டி சுட்டி குறும்புகளை செய்கின்றனர்.இது பேராசிரியர் சத்தியராஜ்க்கு பிடிப்பதில்லை.இதனால் சத்தியராஜ் இவர்கள் மூவரிலும் கோபமாக இருக்கிறார்.இவர்களின் கலாட்டா கல்லூரியில் தொடர்கிறது.இதில் பரீட்சை வர பரீட்சையில் அதிக மதிப்பெண்ணை விஜய் பெருகிறார் இதனால் விஜய் மீது சத்தியராஜ்க்கு விருப்பம் வருகிறது மீண்டும் விஜய் மற்றும் நண்பர்களின் குறும்பு தொடரவே கோபப்படும் சத்தியராஜ் விஜய் சிறீகாந்தை விட்டு பிரியும் படி ஜீவாவுக்கு கூறுகிறார் தனது நண்பர்கள் தனக்கு செய்த உதவியும் தம் குடும்பத்துக்கு செய்த உதவியையும் எண்ணிய ஜீவா மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்யும் போது தற்கொலையிலிருந்து தப்பி கோமா நிலைக்கு போகிறார் இவர் எவ்வாறு கோமா நிலையிலிருந்து மீண்டார் பின் அவரின் வாழ்கை எண்ண ஆனது எனக்கதை நகர்கிறது . விஜய் பேராசிரியரின் நிச்சயதார்தமான இலியானவை காண்கிறார் .இலியானாவின் நிச்சயதார்த மாப்பிளை பணப்பேய் பிடித்தவராக இருக்க அதை விஜய் இலியானாவுக்கு விளக்குகிறார் அதன் பின் இருவருக்கும் காதல் வருகிறது.கல்லூரி வாழ்கைக்கு பின் விஜய் காணாமல் போகிறார் விஜயை தேடிச்செல்லும் நண்பர்கள் விஜயின் காணாமல் தேடுகின்றனர் இதற்கிடையில் இலியானாவுக்கு கல்யாண ஏற்பாடு நடைபெறுகிறது அதன் பின் விஜய் கிடைத்தாரா விஜய் இலியானா சேர்ந்தார்களா விஜய்க்கு என்ன நடந்தது ஜீவா சிறிகாந்தின் நிலை என்ன என படம் சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது.இப்படம் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.
இயக்கம் - சங்கர்
இசை - ஹரிஸ் ஜெயராஜ்

1 comments:
தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.
ennapathu thappa irukku pongalukku mathunga boss
Post a Comment