Wednesday, March 16, 2011

எங்கேயும் காதல், வேலாயுதம்?

சன்பிக்சர்ஸ் வழங்கும் ‘மாப்பிள்ளை’யை ஆவலுடன் எதிர்பார்க்கிறார் ஹன்சிகா மோத்வானி. முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே, கைவசம் 3 படங்கள். எப்படி?
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது, தமிழில் முதல் வாய்ப்பாக கிடைத்தது ‘மாப்பிள்ளை’. இந்த படத்தை முடிப்பதற்குள்ளேயே நிறைய வாய்ப்புகள் வந்தது. சிலவற்றை ஏற்றேன். தமிழில் என் நடிப்புக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை இந்த வாய்ப்புகள் புரிய வைத்தது. அதுமட்டுமில்லாமல் எனது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவும் இதை எடுத்துக்கொள்கிறேன். சிறந்த நடிகை என்று பெயர் வாங்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான முயற்சிகளில் தொடர்கிறேன்
ஹன்சிகா
ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் இது. இந்தியில் இது அனில் கபூர் நடிப்பில் ‘ஜமை ராஜா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அந்த படத்தை பார்த்திருக்கிறேன். அதில் மாதுரி தீட்சித் நடித்திருந்தார். அந்த கேரக்டர்தான் என்றாலும் புதிய ‘மாப்பிள்ளை’யில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
ஹீரோ தனுஷ் எப்படி?
தமிழில் ‘மாப்பிள்ளை’ முதல் படம் என்பதால் செட்டில் ஆரம்பத்தில் அமைதியாகவே இருப்பேன். தமிழ் தெரியாது என்பதால் அதுவும் பிரச்னையாக இருந்தது. பிறகு தனுஷ்தான் தமிழ் கற்றுக்கொடுத்தார். சில அடிப்படையான வார்த்தைகளை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதுமட்டுமில்லாமல் அவர் சிறந்த நடிகர். சில காட்சிகளில் இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளோம்.
மனீஷா கொய்ராலாவுடன் நடித்தது பற்றி?
மனீஷா சீனியர் நடிகை. தமிழில் சில ஹிட் படங்களை கொடுத்தவர். இந்தியில் பல ஹிட்களை கொடுத்தவர். அவருடன் நடிக்கும்போது அதிகமாக கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு அசைவிலும் நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் அவர். இது போலான அனுபவங்கள் மீண்டும் கிடைப்பது கஷ்டம்.
எங்கேயும் காதல், வேலாயுதம்?
‘எங்கேயும் காதல்’ இளமையான காதல் கதையை கொண்ட படம். முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஜெயம் ரவி ஜாலியான நடிகர். அவருடன் இருந்தால் நேரம் போவது தெரியாது. பிரபுதேவா இயக்கத்தில் நடித்தது இனிமையான அனுபவம். ‘வேலாயுதம்‘ படத்தில் விஜய்யுடன் நடிக்கிறேன். இதில் கிராமத்து பெண் வேடம். இந்தப் படங்களுக்குப் பிறகு உதயநிதி ஹீரோவாக நடிக்கும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் ஹீரோயினாக நடிக்கிறேன். இது தவிர தெலுங்கு படங்களும் இருக்கிறது. இந்த வருடம் எனக்கு சிறப்பானதாக அமையும் என நினைக்கிறேன்.

0 comments:

Post a Comment