Tuesday, March 15, 2011

மருத்துவராக விஜய்

பகலவன் படம்தான் விஜய்யின் அடுத்த அரசியல் படமாக இருக்கும் போலிருக்கிறது.
சீமானும், விஜய்யும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தலைமையின் நிழலில் இளைப்பார வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் பகலவன் படத்தை துவங்கிவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம் இருவரும்.
இப்படத்தில் மருத்துவராக நடிக்கிறார் விஜய். விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தெல்லாம் பவர்புல் டயலாக் வைத்திருக்கிறாராம் சீமான்.
அதை விஜய் சொல்ல கேட்கும்போது கிராமபுற விவசாயிகள் அக்கறையோடு அத்தொழிலில் ஈடுபடுவார்கள் என நம்புகிறார் சீமானும்.
முதலில் மருத்துவராக இருக்கும் இவர், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகிவிடுவாராம்.
அந்த பதவியை வைத்துக் கொண்டு அவர் எடுக்கும் அதிரடிகள்தான் பகலவன் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment