Friday, March 25, 2011

கலக்க தொடங்கிய சட்டப்படி குற்றம்

ஆர்வத்தோடு விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதைவிட பேரார்வத்தோடு இப்படத்தை தடுத்து நிறுத்துகிற வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம் சிலர்.

இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த மனுவை ஆணையம் பரிசீலித்ததாக கூட தெரியவில்லை.
இன்னொரு செய்தி. இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை கோரும் முயற்சியும் நடப்பதாக கூறுகிறார்கள் எஸ்.ஏ.சி வட்டாரத்தில். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தை பார்த்தவர்கள் நல்ல விலைக்கு வாங்குவதாகவும் தெரிவித்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களை யார் மிரட்டினார்களோ தெரியாது. அத்தனை பேரும் கையை விரித்துவிட்டார்களாம். "அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. கிட்டதட்ட 160 தியேட்டர்களில் நானே படத்தை வெளியிடுகிறேன்" என்றார் எஸ்.ஏ.சி நம்மிடம்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நம்புகிறவன் நான். இந்த படத்தை அவர்கள் பார்த்துவிட்டு சொல்லட்டும். இதுவரை நாட்டில் நடக்கும் அநீதிகளை மட்டுமே எடுத்துச் சொன்னது சினிமா. நான் இந்த படத்தில் அந்த அநீதிக்கான தீர்வையும் சொல்லியிருக்கிறேன் என்றார் அவர்.

0 comments:

Post a Comment