![]() |
இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் உடன் இருந்தார்.![]() சில விசமிகள் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். வேண்டுமானால் சேலம் மாவட்ட தலைவரையே கேடுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கை காட்டினார். அவர், உறுப்பினர் கார்டுகளை எரித்தவர்கள் விபரம் அறியாத சிறியவர்கள். அவர்கள் சிலரது பேச்சைக்கேட்டு அப்படி செய்துவிட்டார்கள். அதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. நாங்கள் எங்கள் தலைவர் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அவர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆட்சியில் அமர்த்த நாங்கள் முழு மூச்சுடன் பாடுபடுவோம் என்று தெரிவித்தார். |
0 comments:
Post a Comment