விஜயும் சீமானும் விஜயின் 50 வது படத்தில் இணைந்திருக்க வேண்டும் ஆனால் பல்வேறு காரணங்களால் சீமான் ஜெயிலுக்கு போக விஜயும் சீமானும் இணைய முடியாமல் போனது .51 வது 52 வது படங்களை கடந்து விஜயின் 53 வது படத்தை சீமான் இயக்குவதாக இருந்தது.ஆனால் விஜய் நண்பன் படத்தில் சங்கரின் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார்.இதனால் 54 வது படத்தில் விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.தற்பொழுது தேர்தல் பணி நடப்பதால் அதனை முடித்துக் கொண்டு விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.ஆனால் அதிலும் இப்பொழுது குழப்பம் நிலவுகிறது.ஏனெனில் விஜய் மணிரத்தினத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படப்படப்பிடிப்பு தொடங்கினால் இன்னும் பகலவன் பிந்தும் என எதிர்பார்கப்படுகிறது.ஆயினும் இப்படத்தை மிக விரைவில் தொடங்கி முடித்து விடும் முனைப்பில் இருக்கிறார் சீமான் என சீமான் தரப்பு கூறுகிறது பொன்னியின் செல்வன் இவ்வருட இறுதியில் தொடங்கவிருப்பதால் மே ஜூன் மாதங்களில் பகலவன் படத்தை தொடங்கி முடிப்பதென சீமான் உள்ளார்.விஜயின் வேலாயுதமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது நண்பன் படமும் வேகமாக வளர்கிறது.இதனால் விஜய் ஜூன் மாதத்தில் பகலவன் படத்தில் நடிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.