Wednesday, September 28, 2011

தீபாவளிக்கு முன் தினம் 'வேலாயுதம்'

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'வேலாயுதம்' படம் முன்னரே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது தீபாவளி சமயத்தில் வெளியிட உள்ளனர்.

'வேலாயுதம்', 'ஏழாம் அறிவு', 'மயக்கம் என்ன' ஆகிய 3 படங்கள் தீபாவளி சமயத்தில் வெளியிட உறுதி செய்து இருக்கிறார்கள். இதில் 'வேலாயுதம்' படம் மட்டும் தீபாவளிக்கு முன் தினம் அக்டோபர் 25ம் தேதியே வர இருக்கிறது.

0 comments:

Post a Comment