Saturday, September 10, 2011

மீண்டும் பொதுக்குழு கூடும் எஸ்.ஏ.சந்திரசேகர் பிடிவாதம்


கடந்த 4 -ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டS.A.Chandrasekarமுடிவு செய்திருந்தார் தற்போதைய பொறுப்பு தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் இந்த பொதுக்குழுவை கூட்டக் கூடாது என்று சங்கத்தில் பலத்த எதிர்ப்பு. நேரடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இந்த பொதுக்குழு கூட்டும் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றார்கள். இதற்கிடையில் தனது சொந்த வேலை காரணமாக வெளிநாடு சென்றுவிட்டார் எஸ்.ஏ.சி.
3-ந் தேதி இரவுதான் அவர் சென்னை திரும்புவார் என்ற நிலையில் தயாரிப்பாளர் பாபு கணேஷ் என்பவர் சென்னை நகர காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் 300 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் 1900 பேரை கூட்டுவது மோதலுக்கு வழிவகுக்கும். எனவே பெரிய இடம் ஒன்றில் இந்த பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றார். உடனே அந்த இடத்தில் பொதுக்குழுவை நடத்த அனுமதி மறுத்தது காவல்துறை.
இந்த இடைபட்ட நேரத்தில் நேரடியாக தேர்தல் தேதியை அறிவித்தார்கள் போட்டி குழுவை சேர்ந்தவர்கள். இவ்வளவு களேபரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு அதிரடியாக வந்திருக்கும் தகவல் இதுதான். வருகிற 11- ந் தேதி சிறப்பு பொதுக்குழுவை கூட்ட முயல்கிறாராம் எஸ்.ஏ.சி. இந்த கூட்டத்தில் முக்கியமான சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போல தகவல் வெளியாகிறது.
கட்டி உருள்வது, மண்டை உடைபடுவது போன்ற அடிஷனல் அவஸ்தைகள் அன்று அரங்கேறும் போல் தெரிகிறது. கண் விழித்துக் கொள்ள வேண்டும் காவல்துறை

0 comments:

Post a Comment