Saturday, September 3, 2011

கெட்ரிக் சாதனை படைத்த காவலன்


மலையாளப்பட உலகின் முன்னனி இயக்குனர் சித்திக் சந்தித்திருக்கும் அனுபவம் வேறு யாருக்கும் கிட்டியிருக்குமா
என்பது சந்தேகம்தான்! ஒரு கதை அழுத்தமான மனித உறவுகளின் சிக்கல்களை பிரதிபலித்தால், அது மொழிகளைக் கடந்து, நாடுகளைக் கடந்து பயணமாகும் என்பதற்கு, சித்திக்கின் பாடிகார்டு படம் ஒரு முன் உதாரணமாகியிருகிறது.

இயக்குனர் பாசிலின் உதவியாளராக திரை வாழ்கையைத் தொடங்கிய சித்திக், ஒரு திரைகதை எழுத்தாளராகத்தான் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். 1986-ல்  பாப்பன் ப்ரியப்பட்ட பாப்பன் என்ற வெற்றிப் படத்துக்கு திரைக்கதை எழுதி இவர், இரடாண்டுகள் கழித்து, ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் படத்தை இயக்கி, மலையாளப் பட உலகில் கவனத்துகுறிய இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் வெளியான மணிச்சித்திரத்தாள் படத்தின் மூலம் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக உயர்ந்தார். சித்திக்கின் பெரும்பாலான படங்கள் ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகியிருகின்றன. ஆனால் பாடிகார்டைப் போல சாதனை படைத்தது இல்லை.
2005-ஆம் ஆண்டு திலீப்-நயந்தாரா நடிப்பில் பாடிகார்ட் கதையை படமாக்கினார் சித்திக். அது கேரளபட உலகில் வெற்றி படமாக அமைந்தது. அதன்பிறகு அந்தப் படத்தை மறந்து விட்ட சித்திக் பிறகு 2009-ஆம் ஆண்டு விஜய்-அசின் நடிப்பில் பாடிகாட்டை தமிழில் ‘காவலன்’ என்ற படமாக தயாரித்தார். பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையில் வெளியான இந்தப் படம் ஃபாக்ஸ் ஆபீஸில் சைலண்டாக 35 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தது. தற்போது பாடிகார்டை அதே தலைப்பில் சல்மான்கான்- கரீனா கபூர் ஜோடியை வைத்து ஹிந்தியில் இயக்கினார். நேற்று 2800 தியேட்டர்களில் வெளியானது. வெளியான ஒரேநாளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்து இதற்கு முன்பு பாலிவுட்டில் வெளியான படங்களின் வசூல்சாதனைகளை முறியடித்திருகிறது. மலையாள பாடிகார்டின் திரைக்கதையை, விஜயின் மாஸ் இமேஜுக்காக கொஞ்சம் மாற்றிய சித்திக், தற்போது சல்மானின் மாஸ் இமேஜுக்காக பாலிவுட் திரைகதையிலும் மாற்றம் செய்துள்ளார். ஆனால் அடிப்படையான கதை அமைப்பை மாற்ற வில்லை சித்திக்!
ஒரே கதையை மூன்று மொழிகளில் இயக்கி, ஹாட்ரிக் சாதனை படைத்த சித்திக், தற்போது ஹாலிவுட்டிலும் இந்தப் படத்தை இயக்க இருகிறாராம். இதுதவிர தெலுங்கில் பாடிகார்டின் ரீமேக் உரிமையை பெற்று, வெங்கடேஷ்-த்ரிஷா ஜோடியின் நடிப்பில் பாடிகார்டை இயக்கினார். ஆனால் அந்தபடம் தெலுங்கில் பிளாப் என்பதுதான் ஆச்சர்யம்.

0 comments:

Post a Comment