Wednesday, September 7, 2011

சினிமாவில் எனக்கு வாழ்க்கை கொடுத்தது நடிகர் விஜய்: டைரக்டர் பேரரசு பேட்டி


ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில் பிரப்ரோடு ஸ்ரீயாளி ஓட்டலில் அரசு பள்ளிகளில் படிக்கும் 250 ஏழை மாணவ-மாணவிகளுக்கு 2 ஆயிரம் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீ அவதார் ஜூவல்லர்ஸ்-சா£?ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
 
ஸ்ரீவாசவி வெங்கடேசன், தாய் எண்டர்பிரைசஸ் குருநாதன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் 2 ஆயிரம் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார். முன்னதாக டைரக்டர் பேரரசு நிருபர்களிடம் கூறியதாவது:-  
 
நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை.
 
தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. விரைவில் சிவகங்கை என்ற படத்தை இயக்கவுள்ளேன். அது நிச்சயம் விருதை பெற்று தரும்.
 
நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாகவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். அவருக்கான கதை தயாராக உள்ளது.
 
ராணா படத்துக்கு பின்னர் ரஜினியை சந்திப்பேன்.தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் திருட்டு சி.டி.யில் பாடம் பார்ப்போரின் எண்ணிக்கை குறையும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கவிதாலயம் விழாவில் பரத நாட்டிய ஆசிரியைகள் யெசுதா கேசவன், தாரணி சண்முகம், சித்ரா சிவகுமார், ரேணுகா ஸ்ரீ ஆகிய ஆசிரியைகளின் 100 மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கவிதாலயம் ராமலிங்கம் செய்திருந்தார். முன்னதாக பேரரசு ஈரோடு வடக்கு ரோட்டரி  கிளப் சார்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ரோட்டரி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் தலைவர் சக்திநல்லசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment