Monday, August 29, 2011

வேலாயுதம் பாடல்கள் விமர்சனம்


விஜய் நடிப்பில் விஜய் ஆன்டனியின் இசையில் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பாடல் வேலாயுதம் ஆகும்.விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா ரசிகர்களும் இசைப்பிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்த பாடல் இப்பாடல்கள் ஆகும்.இப்பாடல்கள் நேற்று வெளியாகின பாடல்கள் சொனி மியூசிக் விற்றது.இப்பாடல் சீடிக்கள் விற்பனையில் சாதனையை படைத்துள்ளது. எந்திரனின் வசூலை இப்பட பாடல் சீடி முறிகடைத்துள்ளது என சொனி மியூசிக் கூறியுள்ளது.இப்பாடல்கள் பற்றி பார்ப்போம்.இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களும் ஒரு தீம் மியூசிக்குமாக மொத்தம் ஆறு பாடல்களாகும்.
மைய வைச்சு மயக்கி புட்டாய்
கார்த்திக் சாருலதா இப்பாடலை பாடியுள்ளனர்.இப்பாடலின் இசையை வித்தியாசமாக அமைத்துள்ளார் விஜய் அன்டனி.இப்பாடலில் விஜய் ஆன்டனி தனது பாடலுக்கு ஏற்றவகையில் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் என்ற வரியை பயன்படுத்தியுள்ளார்.இது பாடலுக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.குத்துப்பாடலாக இருந்தாலும் மெலடியும் இணைந்து காணப்படுகிறது.இப்பாடல் விஜய் ஹன்சிகா பங்கு பெறும் பாடலாகும்.இப்பாடல் பாடலை கேட்கும் போதே விஜயின் நடனமும் கன்சிகாவின் இளமைக்கும் ஏற்ற பாடல் என்பதை காட்டுகிறது.
மதிப்பு 4.5/5



மாயம் செய்தாயோ
சங்கீதா ராஜேஸ்வரன் பாடிய பாடல் ஆகும்.சங்கீதாவின் குரல் பாடலுக்கு ஸ்பெசல் இனிமையான மெலடியாக அமைந்துள்ளது.பாடலில் வரும் தகது தக திமி மேலும் வலுச்சேர்க்கிறது.பாடல் வரிகள் பாடலுக்கு மேலும் சிறப்பு.மெலடி மற்றும் வெஸ்டனின் கலவையாக வரும் இப்பாடல் கேட்கும் அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க துண்டுகிறது.
மதிப்பு 4.5/5
முளைச்சு மூணு இலையை
படத்தின் சிறப்பான மெலடிக்கு சான்றாக அமைந்த பாடல் இப்பாடலாகும்.காதலன் காதலிக்கு இடையிலான காதலை வெளிப்படுத்தும் வரிகளை கொண்டு அமைந்துள்ளது.விஜய் ஆன்டனியின் வித்தியாசமான இசை பாடலும் சிறப்பு.எளிமையான இசை பாடலுக்கு ஸ்பெசல்.இதற்கு பிரசன்னா சுப்பிரியா யோசியின் குரல் பக்க பலமாக அமைந்துள்ளது.படத்தின் படப்பிடிப்பு அருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பு 5/5

ரத்தத்தின் ரத்தமே
ஹரிகரன் மதுமிதா பாடிய பாடல் ரத்தத்தின் ரத்தமே ஆகும்.இப்பாடல் விஜய்க்கும் தங்கைக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது.பாடல் வரிகளும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது.அனைவருக்கும் பிடித்த பாடலாக அமையும் என்பது உறுதி.செத்தாலும் புதைத்தாலும் எனும் வரி வரும் இடத்தில் விஜய் அன்டனியின் இசை பிளஸ்.இடையில் நீங்க நல்லா இருக்கணும் வரியும் அதற்கு அமைத்த இசையும் சிறப்பு.
மதிப்பு 5/5

சொன்னால் புரியாது
விஜய் அன்டனி வீர சங்கர் பாடிய பாடல் சொன்னால் புரியாது பாடலாகும்.இப்பாடலின் தொடக்க வரிகள் விஜயின் அறிமுகப்பாடல் என்பதை காட்டுகிறது.குத்து மற்றும் கருத்து நிறைந்த பாடலாகும்.விஜயின் ஆரம்ப பாடலுக்கு ஏற்ற மாதிரி இசையை அமைத்துள்ளார் விஜய் அன்டனி.சிறப்பான வரிகள் பாடலுக்கு சிறப்பாகும்.வேட்டைக்காரன் பாடலின் அறிமுகப்பாடலை தாண்டி சிறப்பாக அமைந்துள்ளது.ஆலய திருவிழாவை சிறப்பாக அமைத்துள்ளனர் இப்பாடலில். இப்பாடல் படத்தொகுப்பு கண்டிப்பாக ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.
மதிப்பு 4.5/5

வேலா வேலா வேலாயுதம்
வேலாயுதம் படத்தின் தீம் மியூசிக் சிறப்பான இசையை வழங்கியுள்ளார்.இது படத்தொடக்க விழாவின் போது ஒளிபரப்பபட்டு அனைவரது வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
மொத்தத்தில் வேலாயுதம் பாடல்கள் கேட்டவுடனே கவரும் தேனாமிர்தம்.
விமர்சனம்
என்றும் அன்புடன் கிஷோர்.

0 comments:

Post a Comment