விஜய்- கௌதம் மேனன் முதல் முறையாக இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பது

உறுதியானது. இயக்குனர் கௌதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் லண்டன் பங்குச்சந்தைகளில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்களை 15 சதவிகிதம் அளவுக்கு ஆஸ்கர் தமிழன் ரஹ்மானும் வாங்கியுள்ளார். இதனால் விஜய்- கௌதம் மேனன் முதல் முறையாக இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பது உறுதி என்று சொல்லப்பட்டது.
ஆனால் ரஹ்மான் தரப்பில் இதை உறுதி செய்யாததால், இந்தப் படத்தின் முதல் விளம்பரத்தில் ரஹ்மான் பெயர் இடம்பெற வில்லை. தற்போது ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புகொண்டதால் இந்தப் படத்தின் இரண்டாவது மூன்றாவது விளம்பர டிசைன்களில் ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.
வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் ஆகியோரின் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானாலும் விஜய் தரப்பில் இருந்து கடைசி நேரம் வரை எந்த தகவலையும் உறுதி வில்லை. இந்த நிலையில்தான் விஜய் - கெளதம் மேனன் படம் திடீரென்று முடிவாகியிருக்கிறது.
இந்தப் படத்துக்கு ஹாலிவுட்டின் முன்னனி நிறுவனம் கிராஃபிக் மற்றும் ஈஎஃபெக்ஸ் பணிகளை கவணிக்க இருகிறதாம்.

0 comments:
Post a Comment