நடிகர், நடிகைகள் பலர் தங்களின் சுதந்திர தின ஆசைகளை வெளியிட்டு உள்ளனர். |
அதன் விவரம் பின்வருமாறு: விஜய்: இந்தியாவில் நூறு சதவித மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பது என் விருப்பம். ஒவ்வொரு வருடமும் நான் இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஏழைகளுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றை வழங்கி வருகிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். அனைவருக்கும் கணணி கல்வி அவசியம். இதற்காக கணணி பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கணணி பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமன்னா: என்னை இந்தியன் என் அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நம்மை சுற்றி நிறைய விசயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நிறைய வழக்குகளும் நடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இதோடு நல்ல விஷயங்களும் நடக்கின்றன. அவைகளை நினைவில் கொள்வோம். அமலாபால்: ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. அரசியல் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு ஊழலும் மலிந்து இருக்கும். அவற்றை எதிர்க்க அன்னாஹசாரே போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஒவ்வொரு துறையிலும் இந்தியா ஒளிர்கிறது. அஜ்மல்: ஊழல் ஒழிய வேண்டும். நிறைய வழக்குகள் ஊழலை மையப்படுத்தி நடக்கின்றன. இக்காலத்து இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக மாற வேண்டும். இந்தியாவுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. |
0 comments:
Post a Comment