திடீர் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறதாம் த்ரி இடியட்ஸ்! காதும் காதும் வச்ச மாதிரி கசியும் இந்த நியூஸ் பற்றி கவலைப்படத் தேவையில்லை ஷங்கரின் ரசிகர்கள். ஏனென்றால் இதே விஜய்யுடன் இணைந்து தனது பயணத்தை தொடரப் போகிறாராம் அவர். அப்படின்னா த்ரி இடியட்ஸ்? அது 'வரும்.... ஆனா வராது' கதைதானாம் இப்போதைக்கு!
எந்திரன் படத்தை விநியோகம் செய்தது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம்தான். இவர்களது தயாரிப்புதான் த்ரி இடியட்ஸ். இந்த படத்துக்காக முக்கால் கிணறு தாண்டியிருந்தார்கள் ஷங்கரும் மற்றும் அவரது இயக்கத்தில் நடிக்க தயாராக இருந்த ஹீரோக்களும். இந்த நிலையில்தான் திடீரென்று தனது தயாரிப்பு முயற்சியை தள்ளிப் போட்டிருக்கிறது ஜெமினி.

ஹிட்டான படத்தை விட்டுட்டு வேறு படத்தை எடுப்பது, குடத்தை வித்துட்டு தண்ணி வாங்குன கதையாவுல்ல தெரியுது!
0 comments:
Post a Comment