வேலாயுதம் படத்தின் அதிரடி வெற்றியின் சூடு அடங்குவதற்கு முன்பாகவே உறுதியனது ஏ ஆர் முருகதாஸ் – விஜய் கூட்டணி! இந்தப் படத்துக்கு ஒருவழியாக துப்பாக்கி என்று செமா ஹாட்டான தலைப்பைச் சூட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. விஜய் சம்பளம் 21 கோடி என்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 55 கோடியாம். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை.
வேலாயுதம் அதிகளவு வசூலை ஈட்டியதால் இப்படத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.. எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் இந்தபடத்தை தயாரிக்கவிருந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு கலைப்புலி தாணுவுக்கு கைமாறி விட்டது.
காஜல் அகர்வால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்குகிறது. இது பாட்ஷா போல ஆனால் ஸ்டைலிஷ் தாதா கதை என்கிறார்கள் முருகதாஸ் உதவியாளர்கள் வட்டாரத்தில்!







0 comments:
Post a Comment