வேலாயுதம் படத்தில் விஜய்க்காக எழுதப்பட்டிருக்கும் ஒரு பாடல் இன்றைய இளம் தலைமுறையினரிடம் மட்டுமல்ல, அரசியல் அண்ணாச்சிகளுக்கும் இஷ்டமான
பாடலாக மாறியிருக்கிறது. ரத்தத்தின் ரத்தமே என்பார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடன்பிறப்பே என்பார் கலைஞர். இவ்விரண்டையும் சேர்த்து ஒரு பாடல், அதுவும் விஜய்யின் நடிப்பில் வந்தால் அது எத்தனை சலசலப்பை ஏற்படுத்தும்? அதுதான் நடந்திருக்கிறது இப்போது திருப்புகிற திசையில் எல்லாம். இப்பாடலை எழுதிய அண்ணாமலை இந்த வரிகளை யோசித்த விதம் பற்றி கூறியதென்ன?
இந்த படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ‘ரத்தத்தின் ரத்தமே’ பாடல்தான் எனக்கு சவாலாக அமைந்தந்து. ஏனெனில், ‘அண்ணன் தங்கை பாசத்தை’ உணர்த்தும் வெற்றிப் பாடல்கள் திரைப்படங்களில் மிகவும் குறைவு. அதனால், இதை எப்படியாவது ஹிட் செய்தே ஆகவேண்டும் என்று நினைத்து ரொம்பவும் யோசித்து, ‘ரத்தத்தின் ரத்தமே’ என்ற எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வார்த்தையை முதல் வரியாக எழுதினேன்.
அந்த வார்த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த வார்த்தை என்பதால், மக்களிடம் அது எளிதாக சென்று சேரும் என்று எதிர்பார்த்தேன். அதே நேரத்தில் ஒரு தங்கையை நோக்கி அண்ணன் சொல்வதற்கும் அதைவிட பொருத்தமான வேறு வார்த்தை என்ன இருக்கிறது! அடுத்த வரியாக ‘என் இனிய உடன்பிறப்பே’ என்று கலைஞர் சொல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.
அதுவும் அண்ணன் தங்கை பாசத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகள். மேலும், விஜய் சாருக்கு இந்த இரண்டு பெரிய கட்சிகளிலுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதால், அதுவும் இந்தப் பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இந்தப் பாடலில் வரும், ‘செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா’ என்கிற வரிகளை விஜய் ஆண்டனி சார் நான் எழுதிய நொடியிலேயே வெகுவாக ரசித்துப்பாராட்டினார். விஜய் சாருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்று அவர் மூலம் நான் அறிந்தபோது,பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

0 comments:
Post a Comment