பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, July 12, 2011

விஜய் ரசிகர்களின் சமூகப்பணி

ஒவ்வொரு நடிகரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அத்தகைய ரசிகர்கள் தமது நடிகரின் படம் வரும் பொழுது கட் அவுட் வைப்பது பாலாபிடேகம் செய்வதுடன் நின்று விடுகிறார்கள்.ஆனால் சிலரின் ரசிகர்கள் மாத்திரம் சமூகத்தொண்டைச் செய்கிறார்கள்.அந்த வகையில் விஜயின் ரசிகர்களும் பல சமூகத்தொண்டை செய்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளனர். இப்பொழுது நாகர்கோவிலுக்கு மிக அணமையில் உள்ள கிரமமாகிய ஆசாரிபாலம் எனும் இடத்தில் ஒரு சந்திப்பை நிகழ்த்தி  ஐம்பது விஜய் ரசிகர்கள் கண்ணை தானமாக வழங்கினர். விஜய் ரசிகர்மன்றம் சார்பில் ரசிகர்களே முன்னின்று இதனை செய்தனர். விஜயின் தந்தை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கினார். இவ்வாறு கண்ணை தானம் வழங்கியோரை விஜயின் தந்தை ஊக்கப்படுத்தியதோடு ஆசாரிபாலம் அரசு வைத்தியசாலைக்குச் சென்று இதனை பார்த்தார்.

Monday, July 11, 2011

ரூ 65 கோடி படம்: விஜய் – முருகதாஸ் இணைகிறார்கள்

ஏஆர் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தன் இன்றைய ஸ்பெஷல் செய்தி
முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள்.
முருகதாஸுக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.
இப்போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் ஏழாம் அறிவு படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
கதை, நடிகர்கள் தேர்வு குறித்தெல்லாம் ஏற்கெனவே முருகதாஸும் விஜய்யும் பேச்சு நடத்தி முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 21 முதல் வேலாயுதம் இசை

விஜய் ரசிகர்களை பொறுத்தவரை விஜய்யின் பட ரிலீசை போல்வே விஜய் படத்தின் பாடல் ரிலீசும் முக்கியம். ஏனென்றால் விஜய் பட பாடல்கள் எப்போதும் அதிரடியாக இருப்பதும், எப்போதும் விஜய் பட பாடல்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதும் தான் இதற்கு காரணம்.

இதோ அதோ என்று சொல்லப்பட்ட வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 21தேதி நடக்கப்போகிறது. படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், தசாவதாரம் படத்திற்கு ஜாக்கி ஜானை அழைத்து வந்தது போல் இப்படத்தின் ஆடியோ ரிலீசையும் யாரவது முக்கிய பிரமுகரை வைத்து நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இப்படத்தின் இசையை விஜய் ஆன்டனி அமைத்துள்ளார்.ஏற்கனவே விஜயுடன் இணைந்து  வேட்டைக்காரன் என்ற படத்தில் கிட் பாடல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விஜயின் சிபாரிசின் பெயரிலே இப்படத்துக்கு இசையமைப்பாளராக தெரிவு செய்தனர்.

விஜய் ஜெனிலியா ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வர உள்ளது.

Sunday, July 10, 2011

விஜயின் புதிய பட தகவல்கள்

இப்பொழுது தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்படும் செய்திகளில் ஒன்று விஜய் முருகதாஸ் கூட்டணி பற்றியாகும். இவர்கள் இருவரும் இணையப்போவது பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வரவில்லை.எனினும் இவர்கள் இருவரும் இணையும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. விஜய் மற்றும் முருகதாஸ் இருவரும் தம்முடைய தற்போதைய படங்களை முடித்துவிட்டு புதியபடத்தில் இணைய உள்ளனர்.இப்படம் ஆக்சன் கலந்த காதல் படமாக உள்ளது. மாலை நேரம் மலைத்துளி என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் விஜயின் நண்பன் பட படப்பிடிப்பும் முருகதாஸின் ஏழாம் அறிவின் இறுதி வேலைகளும் முடிவடைந்து விடும்.இதனை அடுத்து விஜய் முருகதாஸ் இணையும் புதிய படம் பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது.

 நிரவ்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜயுடன் இணைந்து போக்கிரி என்ற கிட் படத்தை கொடுத்தவர் நிரவ்ஸா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தின் தயாரிப்பாளராக விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைய உள்ளனர்.ஏற்கனவே ரவி விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தை வெளியிட்டதுடன் விஜய் தற்பொழுது நடிக்கும் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிப்பதற்கு தீபிகா படுகோனை அணுகியுள்ளனர். ரஜனியுடன் இணைந்து ரணா படத்தில் நடிக்க உள்ள தீபிகா படுகோனை விஸ்வரூபம் படத்தில் நடிப்பதற்கும் அணுகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Saturday, July 9, 2011

விஜய் - விஜய் ஆண்டனி -ஜெயம் ராஜா- வேலாயுதம்

விஜய் நடிப்பில் மிகந்த பொருட்செலவில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இசை வெளீயிடு, படம் வெளீயிடு  குறித்து படக்குழுவினிரிடம் விசாரித்ததில், படக்குழுவினர் அளித்த தகவல் : 

படப்பிடிப்பு 90% சதவீதம் வரை முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் பாக்கியுள்ளது. விஜய் - ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடலை  வெளிநாட்டில் படமாக்க இருக்கிறோம். விஜய் - ஜெனிலியா சம்பந்தப்பட்ட பாடல் செட் போட்டு படமாக்க இருக்கிறோம்.

விஜய் இப்படத்தில் நிறைய காட்சிகளில் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். படத்தில் இசை வெளியீடு இம்மாதம் நடைபெறும்.
 ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடித்த தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டில் ஜாக்கிசான் கலந்து கொண்டார். அதைப் போலவே  இப்படத்தின் இசை வெளீயிட்டை மிகப் பிரம்மாண்டமாக நடித்த திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். விஜய் தற்போது அ.தி.மு.கவிற்கு ஆதரவு அளித்து வருவதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

விஜய் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு விஜய் ஆண்டனி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். 

திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற விஜய்யின் மாஸ் படங்களின் வரிசையில் வேலாயுதம் படமும் இடம் பெறும்.