பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, June 19, 2011

விஜய் பெற்ற விருதுகள்!

1998- தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை)
1998 – தமிழக அரசின் கலைமாமணி விருது
2000- தமிழக அரசின் எம்ஜிஆர் விருது
2004- சென்னை கார்ப்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது (கில்லி)
2004-தினகரன் சிறந்த நடிகர் விருது (கில்லி)
2004-பிலிம்டுடே சிறந்த நடிகர் விருது (கில்லி)
2005-பொது சேவைக்கான வெள்ளிப் பதக்கம்
2005- திருப்பாச்சி படத்துக்காக தமிழக அரசு சிறப்பு விருது
2006- டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ‘நாளைய சூப்பர் ஸ்டார்’ விருது
2007-விஜய் டிவி விருது – எண்டர்டெயினர் ஆப் தி இயர் – போக்கிரி / அழகிய தமிழ்மகன்
2007-அம்ரிதா மாத்ருபூமி சிறந்த நடிகர் விருது (போக்கிரி)
2007- எம்ஜிஆர் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
2008-இசையருவி சிறந்த நடிகர் விருது (போக்கிரி)
2009- விஜய்டிவி மக்கள் விரும்பும் நடிகர் விருது – வேட்டைக்காரன்
2009-இசையருவி – மக்களின் அபிமான நடிகர்
2010- ஏசியா நெட் சிறந்த பிரபல நடிகர்

இவை தொடர்பான படங்கள் 















கலகலப்பால் வளரும் நண்பன்

தற்பொழுது விஜய் நடிக்கும் நண்பன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்றுவருகிறது.இப்படத்தின் இக்கட்டப்படப்பிடிப்பில் விஜய் ஜீவா இலியானா சிறீகாந் சத்தியராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடனும் மிகவும் சந்தோசமாகவும் நடித்து வருகின்றனர்.மிகுந்த பகதிப்பழமான கரெக்டரில் ஜீவா நடிக்கின்றார்.ஜீவா நண்பன் படம் தொடர்பான தகவல்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துவருகிறார்.தற்பொழுது தனது டுவிட்டரில் விஜய் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனது தளத்தில் விஜய் தனது ரசிகர்களுக்கு ஹாய் சொல்வது மாதிரிப்படத்தை பதிவுசெய்துள்ளார். இப்படம் நண்பன் சூட்டிங்க் இடத்தில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.விஜய் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து நன்றி சொல்லியுள்ளனர் விஜயை டுவிட்டரில் வரும்படியும் ஆலோசனை வழங்கியுள்ளனர் ஜீவாவுக்கு.நண்பன் படம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

சிறீகாந்தின் மனம்திறந்த பேட்டி



Saturday, June 18, 2011

விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!


நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் ஹிட் என்ற பூச்சி மருந்தை தவறாக சித்தரித்ததால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரேஜ் சாரா லீ என்ற நிறுவனம், ஹிட் என்ற பூச்சி மருந்தை தயாரிக்கிறது. இது கொசு, கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்காக தயாரிக்கப்படுவது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் டித்து பேரரசு இயக்கிய திருப்பாச்சி படம் 2005-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து சில நாட்களில் சூப்பர் குட் பிலிம்ஸ் மீது கோத்ரேஜ் சாரா லீ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், "கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை தடுப்பதற்காக ஹிட் மருந்தை நாங்கள் தயாரிக்கிறோம். இந்த நிலையில் `திருப்பாச்சி' படத்தை பார்த்தோம். அதில் இந்த பூச்சி மருந்தைப் பற்றி 2 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் அதிர்ச்சி அளித்தன.

கர்ப்பிணியைக் கூட கொல்லும்...

ஒரு காட்சியில், 'இந்த மருந்து, கருவில் உள்ள குழந்தையைக் கூட கொல்லும்' என்று ஒரு கர்ப்பிணியிடம் ஒருவர் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு காட்சியில், வில்லனின் வாயில் ஹிட் மருந்தை அடித்து அவரை ஹீரோ கொலை செய்வதுபோல் காட்டப்படுகிறது. இப்படி இந்த மருந்தை சித்தரித்திருப்பது தவறானது.

ரூ.25 லட்சம் நஷ்டஈடு

மனித உயிர்களுக்கு இந்த மருந்தால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் `திருப்பாச்சி' படத்தில் விதாண்டாவாதமாக கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.

எனவே இந்த மருந்தை பற்றி 'திருப்பாச்சி' படத்தில் வரும் காட்சிகளை தியேட்டரிலோ, சி.டி.களிலோ, டி.வி.களிலோ, கேபிள்களிலோ ஒளிபரப்பப் தடை விதிக்க வேண்டும். இந்த காட்சிகளால் மருந்து வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புக்கான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் தர சூப்பர் குட் பிலிம்ஸ்-க்கு உத்தரவிட வேண்டும்.

இது போன்ற காட்சிகளை வேறு யாரும் பின்பற்றக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இடைக்கால உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பழனிவேல் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு விசாரணையின் போது அந்த காட்சிகளுக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் சில தியேட்டர்களில் மட்டும் அந்த காட்சியை நீக்கி படத்தை திரையிட்டனர். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் அந்த காட்சி நீக்கப்படாமல் திரையிடப்பட்டது.

ரூ.5 லட்சம் கொடுங்கள்

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து அந்த காட்சிகளை காட்டியது, மனுதாரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாய் அமைந்திருந்தது. எனவே மனுதாரருக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் வழங்க வேண்டும்.

மனுதாரரின் தயாரிப்பான இந்த மருந்துக்கு, மத்திய அரசின் தரச்சான்று தரப்பட்டுள்ளது. மனித உயிருக்கு பாதுகாப்பானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் காட்சிகள், அந்த மருந்தின் புகழை கெடுப்பதுபோல் அமைந்து விட்டது.," என்று கூறப்பட்டுள்ளது.

சல்மான்-விஜய் இரண்டு போக்கிரிகள்: ஸ்ரேயாவின் குறும்பு


தென்னிந்திய படங்களுக்கு மட்டுமின்றி பாலிவுட் படத்துக்கும் 'ஸ்டண்ட் மாஸ்டராக' பணியாற்றியவர் 'பெப்சி'விஜயன்.
இவர் தன் மகன் சபரீஸ் நாயகனாக நடிக்க 'மார்கண்டேயன்' படத்தை இயக்கியுள்ளார், இதில் நாயகியாக பிங்கி நடித்துள்ளார்.
படத்துக்கு சுந்தர் சி.பாபு இசையமைத்துள்ளார். இசைவெளியீட்டு விழாவிற்காக தன் பாலிவுட் நண்பரான சல்மான் கானை அழைத்திருந்தார் பெப்சி விஜயன்.
'நான் நடித்த 'வான்டெட்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார். அவருடைய சண்டைகாட்சி யுத்திகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவரோட மகன் சபரீஸ் எனக்கு லிட்டில் மாஸ்டர் மாதிரி.
இப்படி ஒரு ஆர்ப்பாட்டமான விழாவில் இங்கே நான் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. அதனால் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது என்று இசை வெளியீட்டில் கலந்து கொண்ட பாலிவுட் ஸ்டார் ஹீரோ சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இளைய தளபதி விஜய்யும் ஆர்வமாக இதை கவனித்துள்ளார். விழாவில் விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரேயா இங்கே இரண்டு போக்கிரிகளை ஒரே மேடையில் நாம் பார்க்கிறோம் என்று குறும்பாக கூறியுள்ளாராம்.
தமிழில் 'போக்கிரி' படத்தில் விஜய் நடித்துள்ளார். இதன் இந்தி 'ரீமேக்கான' வான்டெட் படத்தில் சல்மான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.