பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Friday, April 1, 2011

விஜய் அமீர் இணைவார்களா?

விஜய் அமீரும் எப்பொதோ இணைந்திருக்க வேண்டும் ஆனால் இணையமுடியாமல் போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.மெளனம் பேசியதே படத்தை அடுத்து விஜயுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினார் அமீர் அது பருத்திவீரன் படத்துக்காக ஆகும் ஆனால் விஜய் அப்படத்தில் நடிக்கவில்லை.இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டு விட்டு ராம் படத்தை எடுத்தார் அதன் பின் விஜயுடன் சேரலாம் என எண்ணிய அமீர் அது நிறைவேறாமல் போக கார்தியை வைத்து பருத்திவீரனை எடுத்தார் அது மிகப்பெரிய கிட்டானது.அதன் பின் அமீர் தனது கனவுப்படமான கண்ணபிரான் படத்தை ஜெயம் ரவியை வைத்து எடுப்பது என திட்டம் போட்டார் அதனை கிடப்பில் போட்டு விட்டு ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவான் படத்தை எடுத்து வருகிறார்.இந்த கண்ணபிரானை விஜயை வைத்து எடுக்கலாம் என எண்ணி விஜயிடம் சென்றார் விஜய் ஓகே சொல்ல மிகுந்த சந்தோசத்துடன் ஆதிபகவான் வேலையை மேற்கொண்டார் அமீர்.தற்போது அமீர் ஆதிபகவானில் மிகவும் வேகமாக உள்ளார்.இது முடிந்த பின் கண்ணபிரான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆயினும் விஜய் ஏனைய படங்களில் மும்முரமாக நடிப்பதால் இப்படம் இன்னும் பிந்தும் எனக்கூறப்படுகிறது.விஜய்க்காக அமீர் காத்திருப்பாரா தெரியவில்லை.பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும்.விஜயின் சுறா வந்த நேரத்தில் விஜய் மசாலா படங்களில் மட்டுமே நடிக்கிறார் எனக்கூறியபோது அமீர் விஜயும் சிறந்த நடிகர் அவரும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பார் எனக்கூறியே கண்ணபிரானில் நடிப்பார் விஜய் என் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தேர்தல் குறித்து விஜயின் நிலை என்ன ஒரு முன்னோட்டம்

விஜய் அரசியலுக்கு வருவார் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகிறபோதும் விஜய் அரசியலுக்கு வருவேன் என எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.இப்போது விஜய் வேலாயுதம் நண்பன் என இரு படங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.தற்போது தேர்தல் சூடு பிடித்துள்ளது.விஜய் யாருக்கு ஆதரவாக பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.ஆனால் விஜய் எந்த விதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.ஆரம்பத்தில் விஜய் அ.தி.மு.க விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் எனவும் அவருக்கு என பிரத்தியோகமான பிரச்சார வான் அமைக்கப்படுகின்றது எனவும் கூறப்பட்டது.ஆனால் அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லை.விஜய் அ.தி.மு.க விற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுப்பார் எனக்கூறப்பட்டது.ஆனால் அதுவும் இதுவரை நடக்கவில்லை.ஆயினும் விஜயின் தந்தை அ.தி.மு.க விற்கு ஆதரவு தெரிவிப்பார் விஜய் என கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறினார்.இப்பொழுது தமிழக அரசியலில் தமிழ் சினிமா உலகம் பெரும் ஆதரவை வழங்குகிறது.சரத்குமார் ராதிகா விஜயகாந் விந்தியா சிங்கமுத்து ராதாரவி கார்திக் என பெரும் சினிமா பட்டாளமே அ.தி.மு.க  விற்கு ஆதரவை திரட்டி வருகிறது.ஆனால் இதுவரை விஜய் எந்த விதமான கருத்தும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விஜயின் காவலன் திரைப்படத்திற்கு எதிராக ஆளும் தரப்பு பிரச்சினை கொடுத்தது.ஆனால அவற்றை தாண்டி படத்தை வெளியிட்டு விஜய் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அதன் பின் விஜய் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அஸாத்தாகுமா வேலாயுதம் சிறப்புப் பார்வை


விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்ட திரைப்படமாக தயாராகி வருவது வேலாயுதம் ஆகும் .இப்படம் அஸாத் படத்தின் தழுவல் எனக்கூறப்பட்டது.ஆனால் இதை மறுத்தார் ஜெயம் ராஜா படத்தின் கதை மட்டும் தான் அஸாத் எனவும் திரைக்கதை சுயமானது எனவும்  கூறினார்.ஆனால் ஆரம்பத்தில் வெளியாகிய ஸ்டில்கள் அஸாத் படத்தை ஞாபகப்படுத்தின.ஆனால் தற்போது வெளியாகிய ஸ்டில்கள் அஸாத் படத்திலிருந்து இப்படம் மாறு பட்டுள்ளது என்பதை கூறுகிறது.
அஸாத் படத்தில் ஒரே ஒரு கட்டத்தில் நாகர்ஜூனா மாஸ் அணிந்து வருகிறார் பின் தனது வழமையான கெட்டப்பில் வருகிறார்.ஆனால் இப்படத்தில் கிளைமைக்ஸ் சண்டைக்காட்சியில் கூட மாஸ் அணிந்து சூப்பர் கீரோவாக வருகிறார் விஜய்.இச் சண்டைக்காட்சி விசாகப்பட்டணத்தில் எடுக்கப்பட்டது.
ஆகவே இப்படத்தில் மாஸ் கீரோவாகவும் சாதரண மனிதராகவும் இரு கெட்டப்பில் தோன்றவுள்ளார் விஜய்.இப்படமும் விஜய் படங்களில் வித்தியாசமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனையோ சூப்பர் கீரோ படம் தமிழில் வந்தாலும் விஜய்க்கு இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஏற்கனவே அந்நியன் கந்தசாமி என தமிழில் சூப்பர் கீரோ படம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏற்கனவே தூள் தில் தீனா என மசாலா படங்கள் வந்தாலும் விஜயின் கில்லி திருப்பாச்சி சிவகாசி போக்கிரி வேட்டைக்காரன் என்பன மிகவும் வெற்றி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இதனைப்போல இப்படமும் ரசிகர் மத்தியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் அஜித் மோதலா?

விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வர உள்ள படம் வேலாயுதம் இப்படத்தின் பெரும்பாலான காட்சி சூட் பண்ணி முடிக்கப்பட்டுள்ளது.இன்னும் 2 பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட உள்ளது.இதில் ஒரு பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.இது விஜயின் அறிமுகப்பாடல் ஆகும்.அடுத்து விஜய் ஜெனிலியா பங்கு பெறும் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளது.இவை முடிந்தால் படம் வெளியாக தயாராகி விடும்.எனவே ஜூன் மாதம் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

அடுத்து அஜித் நடிப்பில் வெளிவர உள்ள 50 வது படம் மங்காத்தா.இப்படம் மே மாதம் வெளிவர இருந்தது .ஆனால் இப்பட சூட்டிங் முடிவடையாத காரணத்தால் இப்படம் ஜூன் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.இதனால் விஜய் படமும் அஜித்படமும் பல வருடங்களுக்கு பிறகு நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயும் அஜித்தும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.இவர்களது படம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாகினாலும் இவர்களது நட்பு மீண்டும் தொடரும் எனக்கூறப்படுகிறது.
இறுதியாக விஜயும் அஜித்தும் நேரடியாக ஆழ்வார் போக்கிரி படங்களை வெளியிட்டனர்.இதில் ஆழ்வார் தோல்வியடைய போக்கிரி மெகா கிட்டானது குறிப்பிடத்தக்கதாகும்.