Saturday, December 24, 2011

விஜய் நடிக்கவிருந்த பகலவன் சீமான் பேட்டி

அதிமுக ஆட்சிக்கு வர, தனது அதிரடி அணல் பறக்கும் பிரச்சாரம் வாயிலாக முக்கிய காரணமாக இருந்தார் சீமான்.
அதேபோல தனது படங்களை முடக்க நினைத்த திமுக மற்றும் சன் டிவிக்கு எதிராக கொதித்தெழுந்த விஜயும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனும் தங்களது விஜய் மக்கள் இயக்கத்தை அதிமுக அதரவு இயக்கமாக மாற்றினார்கள். 
இதனால் விஜய்-சீமான் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. தேர்தலுக்கு முன்பே விஜய்க்கு பகலவன் கதையைச் சொன்னார் சீமான். விஜய்க்கும் பகலவன் கதை பிடித்துப் போய்விட, அப்போது காவலன் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட விஜய் “ சீமானிடம் பகலவன் என்ற கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருகிறது. எப்போது படம் தொடங்கும் என்று இப்போது சொல்ல முடியாது” என்றார்.

இன்னோரு பக்கம் பிரபல தயாரிப்பாளரான தாணு “ பகலவன் படத்தை தயாரிப்பதில் பெருமையடைகிறேன். எனது திரையுலகம் வாழ்கையின் லட்சியப் படமாக பகலவன் இருப்பான்”  என்று தான் கலந்து கொண்ட திரைவிழாக்கள் பலவற்றிலும் பேசினார். அதேபோல இந்தப் படத்தின் மொத்த பாடல்களையும் எழுதவிருந்த கவிஞர் அறிவுமதியும் “ தமிழ்த்திரையின் முக்கியமான படைப்பாக பகலவன் இருப்பான்” என்றார். ஆனால் அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சீமான் இயக்கத்தில் பகலவன் படம் தொடங்கும் என்றுதான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பகலவனைத் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. நாகை மீனவர் படுகொலைப் போராட்டம், ராஜிவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவரின் விடுதலைக்காக தமிழம் முழுவதும் பொதுக்கூட்டம், அதன்பிறகு கூடன்குளம் அனு உலைக்கு எதிராக போராட்டம் என, சீமான் ஜனநாயக வழியில் நாம் தமிழர் இயக்கம் மூலம் தொடர்ந்து போராடி வருகிறார். அவரது தலைமையிலான இயக்கமும் வளர்ச்சியை எட்டியிருகிறது. 

இந்நிலையில் சீமானின் தமிழ்தேசியத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியிருக்கும் பகலவன் படத்தில் நடித்தால் தனக்கு வெற்றிபடமாக அமையும் அதேநேரம், நாம் தமிழர் இயக்கத்துக்கு பெரிய பிரச்சார சாதனமாக ,அந்த இயக்கத்தின் கொள்கைகளை விளம்பரம் செய்தமாதிரி ஆகிவிடும் என்று எஸ்.ஏ.சியும், விஜயும் முடிவெடுத்து, இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம்.

பகலவனில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார்  என்ற தகவல் நம்மை எட்டியதுமே, இதை உறுதிபடுத்திக்கொள்ள சீமானை தொடர்பு கொண்டு கேட்டப்போது. “ ஆமாம்! விஜய் பகலவனில் நடிக்க வில்லை. ஏன் என்ற காரணத்தை நான் இப்போது வெளிபடுத்த முடியாது. தற்போது தமிழ்மக்கள் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்குப் போராடவே நேரம் போதவில்லை. அதனால் சினிமா இயக்க இப்போதைக்கு நேரமில்லை. எனவே பகலவனை படமாக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. 

அப்படியே படமாக்கினாலும் அதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள். பகலவனக்கு முன்பு கோபம் படத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது” என்று தெள்ளத்தெளிவாக சொன்னார் நம்மிடம். ஆனால் விஜய் பகலவனில் நடிக்க மறுத்த காரணத்தை எக்காரணத்தைக் கொண்டும் அவர் வெளிபடுத்த தயாராக இல்லை. அதேபோல தம்பி படத்தின் பாகம் இரண்டை எடுக்க இருப்பதாக வந்த தகவலைக் கேட்டும் சிரித்தார் நம்மிடம்.

0 comments:

Post a Comment