பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Thursday, July 14, 2011

விஜய்.. சூர்யா.. விக்ரம் - பற்றி அனுஸ்கா பேட்டி

'வேட்டைக்காரன்'ல விஜய்யோடு நடிச்சேன். விஜய் ரொம்ப  திறமைசாலி. ஆனா அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். ஷூட்டிங்ல 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சூர்யா நல்ல நடிகராக இருப்பதோடு,  மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த அப்பாவாவும் இருக்கார்.  விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனா அதையும் மீறி அவர் பணிவோட இருக்கார்..

Wednesday, July 13, 2011

vijay gautham menon ar-rahman Movie Latest Update

http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/06/vijay_gautam.jpg
It’s going to be a big bonanza for cine goers as news of Ilayathalapathy Vijay joining hands with the charismatic combo of AR Rahman and Gautham Menon is making waves. It is learnt that Vijay and Gautham had brief discussions some time back regarding this new project and now things are ready to be taken to the next level.

The star crew also has cinematographer Manoj Paramahamsa, presently sharing his Nanban duties with Vijay .Other names include lyricist Thamarai and editor Anthony as part of the illustrious crew. The news of this latest big budget offering, comes after Vijay’s 65 crore collaboration with director A.R. Murugadoss earlier making top headlines just after Ilayathalapathy’s birthday. The Murugadoss – Vijay movie also has cinematographer Nirav Shah and music composer Harris Jayaraj chipping in their valuable contributions. There was also news that Bollywood diva Sonam Kapoor was being considered for the lead heroine.

Vijay who has Shankar’s Nanban followed by Velayutham starring Genelia and Hansika, surely has loads in store for his ardent fans.

லடாக்கில் இடம்பெறும் விஜயின் இருபட படப்பிடிப்பு

லடாக் என்னும் இடம் அழகுபொருந்திய இடமாகும். அமீர்கான் 3 இடியட்ஸ் முடிந்தபின் ஓய்வு எடுப்பதற்காக சென்ற இடம் இவ்விடமாகும். அழகு பொருந்திய இவ்விடத்தில் மலைகள் நதிகள் ஆறுகள் பனித்துளிகள் என அனைத்து அம்சமும் உள்ளது. செல்வராகவன் விக்ரம் சுவாதியை வைத்து எடுத்த படத்திலிருந்து பல படங்களுக்கு இவ்விடத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த சிறப்பு பொருந்திய இடத்தில் விஜயின் வேலாயுதம் படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலே நண்பன் படத்தின் கிளைமைக்ஸ் காட்சியும் படமாக்கப்படுள்ளது. நண்பன் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதுடன் விஜயின் வேலாயுதம் படத்தின் அனைத்துப்பகுதிகளும் முடிந்து பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்படவேண்டி உள்ளது. விஜயின் நண்பனை ஜெமினி பிலிம்ஸ் இந்த வருட தீபாவளிக்கு வெளியிட உள்ளது.

Tuesday, July 12, 2011

மேம்பாலத்துக்காக இடிக்கப்படும் விஜய்யின் திருமண மண்டபம்?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் கட்டப்படவிருக்கும் மேம்பாலப் பணிகளுக்கு இடம் தேவைப்படுவதால், நடிகர் விஜய்யின் திருமண மண்டபம் இடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போரூர் சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். இப் பிரச்சனையை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்கியது. கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் கடைகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. மேம்பால பணிகளுக்காக திருமண மண்டபத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு மேம்பாலப் பணிகளுக்காகத்தான் முன்பு விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது. அதுவே அவரை அன்றைய ஆளுங்கட்சியான திமுக வுக்கு எதிராக பொங்கவைத்தது.

இப்போது விஜய்யின் மண்டபத்துக்கு அப்படி ஒரு ஆபத்து வந்துள்ளது.

விஜய்க்கு சொந்தமாக பல திருமண மண்டபங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒன்று மண்டபத்தை உருவாக்கும் திட்டமும் அவருக்குள்ளது. சென்னையில் மட்டும் ஷோபா, ஜேஎஸ்ஆர் உள்பட சில திருமண மண்டபங்கள் உள்ளன.

மாணவ மாணவிகளுக்கு விஜயின் உதவி

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் துவங்கியுள்ளார்.

இதுபோல் சேலத்தில் வருகிற 17-ந்தேதி ஏழை மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தட்டுகள், மேஜை நாற்காலி ஆகிய பொருட்களும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் விஜய் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மூன்று ரோடு பகுதியில் இதற்கான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.