பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, July 3, 2011

50000 நடிகர்களுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் விஜயின் ‘வேலாயுதம்’


ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா மோட்வானி என இரண்டு கதாநாயகிகள். இப்படம் தற்போது இறுதிக் கட்ட படப்படிப்பில் உள்ளது. இதில் 50000 துணை நடிகர்கள் கலந்து கொள்கின்றனர்.‘வேலாயுதம்‘ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, கொச்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுத்து வருகிறார் ஜெயம் ராஜா. இதில் 50000 துணை நடிகர்கள் கலந்து கொள்கின்றனர். பதினைந்து நாட்களுக்குள் இந்த கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார்.
இதன்படி பார்த்தால் ‘கில்லி’ படத்தில் கபடி ஆட்டம் கிளைமாக்ஸாக வருவது போல், இந்த மைதானத்தில் விஜயின் வேலாயுத ஆட்டத்தை கிளைமாக்ஸ் காட்சியாக எடுத்து வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. சீக்கிரம் அது என்ன ஆட்டம் என்பது தெரியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

Saturday, July 2, 2011

லிப் கிஸ் விஜய்... இம்ப்ரெஸ் உதயநிதி! - ஹன்ஸிகா சீக்ரெட்ஸ்


சின்ன குஷ்புபோல் இருந்த ஹன்சிகா, இப்போது ஸ்லிம் குஷ்பு.
'' 'எங்கேயும் காதல்’ படத்தில் ஜெயம் ரவியையே மறைக்கிற அளவுக்கு இருந்தீங்க. இப்போ மெலிஞ்ச மாதிரி தெரியுதே?''
''யெஸ் பாஸ்...  8 கிலோ குறைஞ்சிட்டேன். போன வருஷம் வாயை கன்ட்ரோல் பண்ண முடியாம கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன். அதான் குண்டாகிட்டேன். இந்த ஒரு வருஷமா டெய்லி ஜிம் போய், டயட்ல இருந்து வெயிட் டைக் குறைச்சிட்டேன். இப்போ ஜிம் போகா மத் தூங்குறதே இல்லை!''
'' 'வேலாயுதம்’ எப்படிப் போய்ட்டு இருக்கு?''
'' 'வேலாயுதம்’ படத்தில் கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். பாவாடை - தாவணிதான். இது எனக்கு ரொம்பவும் பிடிச்ச காஸ்ட்யூம். நான் நடிச்சதுலயே வேலாயுதம்தான் பிரமாண்டமான படம்!''
''விஜய் என்ன சொல்றார்?''
''படத்தில் ஒரு பாட்டு ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அந்தப் பாட்டு ஷூட் முடிஞ்ச உடனே விஜய் சார் சொன்ன கமென்ட்டை மறக்கவே முடியாது. 'பாட்டு முழுக்க நான் என்னைக் கவனிக்கவே இல்லை. உங்களைத்தான் பார்த்துட்டே இருந்தேன். அந்த அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க. இந்தப் பாட்டில் ஆடியன்ஸ் எல்லாரும் உங்களைத்தான் பார்ப்பாங்க’னு சொன்னார். அவர் வாயால் பாராட்டு வாங்கினது பெரிய விஷயம்!''
''நீங்களும் விஜய்யும் லிப் டு லிப் கிஸ் அடிக்கிற மாதிரி ஸ்டில்ஸ் வர ஆரம்பிச்சிருக்கே?''
''சத்தியமாக படத்தில் லிப் கிஸ் ஸீனே இல்லை. நான் விஜய்க்கு முத்தம் கொடுக்கவும் இல்லை. அது ஒரு கேமரா ஜிமிக். பாடல் காட்சியில் அவர் முகத்துக்குப் பக்கத்தில் என் முகத்தைக் கொண்டுபோனேன். அப்போ எடுத்த போட்டோ அது. பார்க்கிறதுக்கு முத்தம் கொடுத்த மாதிரி தெரியுதா?''
'' 'ஒரு கல்... ஒரு கண்ணாடி’ காமெடிப் படமாச்சே... அதில் உங்க ரோல் எப்படி இருக்கும்?''
''ராஜேஷ் டைரக்ட் பண்ணின ரெண்டு படங்களையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன். எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப்போலவே இதுவும் செம ஜாலியான படம். உதயநிதி, சந்தானம், நான்... எங்க மூணு பேரைச் சுத்தி நடக்கும் படம். படத்தில் என்னை அவர் இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணுவார். ஆனா, நான் கண்டுக் கவே மாட்டேன். படம் பாருங்க... செம ஜாலியா இருக்கும்!''
''உதயநிதி எப்படி நடிக்கிறார்?''
''உதயநிதியை அறிமுக நடிகர்னு சொல்லவே முடியாது. ஒவ்வொரு நாளும் பக்காவா ரிகர்சல் பண்ணிட்டு வர்றார். முதல்முறையா கேமரா முன்னாடி நிற்கும் கூச்சமே அவருக்கு இல்லை. செம புரொஃபஷனலா இருக்கார்!''
''மும்பை பொண்ணுங்க ரிலாக்ஸ் பண்ண பார்ட்டிக்குப் போவாங்க... நீங்க எப்படி?''
''ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி மசாஜ் பார்லருக்குப் போவேன். அவ்வளவுதான்!''
''வரவர கிளாமர் தூக்கலா இருக்கே?''
''நடிப்பு மாதிரியே கிளாமரும் ஹீரோயின் களுக்கு முக்கியமானது. கிளாமரான ரோல் என்றால் இழுத்துப் போர்த்திட்டா நடிக்க முடியும்?''
'' 'எங்கேயும் காதல்’ படத்தில் நீங்கள் சரியா நடிக்கலைனு பேசினாங்களே?''
''என்னை யாரும் கட்டாயப்படுத்தி சினிமாவுக்குக் கூட்டிட்டு வரலை. நான் விருப்பத்தோட நடிக்க வந்தேன். 19 வயசுக்குள் 15 படங்களில் நடிச்சு இருக்கேன். நடிக்கிறதுக்காக நான் சிரமப்படணும்னு அவசியமே இல்லை. இந்தியில் நான் நடித்த சீரியலுக்காக 14 விருதுகள் வாங்கி இருக்கேன். தெலுங்கில் நான் நடிச்ச 'தேச முத்ரா’வுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினேன். நடிக்காம எப்படி வாங்க முடியும்?''

நண்பனின் இரண்டாவது பாடல் பதிவு நிறைவு - மதன்கார்க்கி


பாடலாசிரியர் மதன் கார்க்கி நண்பன் படத்தின் அடுத்த பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதி செய்தார். ஹாரிஸ் ஜெயரஜ் இப்பாடலுக்கு சிறப்பான இசை அமைத்துள்ளார். இந்த பாடல், சிறப்பாக பதிவுசெய்யப்பட்டது என மதன் கார்க்கி உலகில் உள்ள தனது ரசிகர்களுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.அவர் பாடல் மற்றும் இசை நிச்சயமாக அனைத்து இசை ரசிகர்களது இதயத்தையும் தொடும் என்று கூறியுள்ளார்.
சங்கர் இப்படத்தை மிக வேகமாக எடுத்து வருகிறார் படத்தின் 60 சதவீதம் முடிவடந்த நிலையில் இப்படத்தினை ஆகஸ்டில் முடிக்க உள்ளார். அத்துடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது எடிட்டிங்க் வேலைகளையும் தொடங்கவுள்ளார். இப்படத்தின் எடிட்டர் அன்டனி ஆவார். நண்பன் படத்தின் இரு பாடல்காட்சிகள் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜய் இலியானாவின் டூயட் பாடலும் விஜய் ஜீவா சிறீகாந் பங்குபெறும் பாடலும் படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். விஜய் இலியானா பங்குபெறும் டூயட் பாடலில் விஜய் அரச கெட்டப்பில் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

விஜய் கெளதம் மேனன் இணையும் புதிய படம்


தமிழ்சினிமாவின் சிறந்த மற்றும் அதிகளவான ரசிகர்களை கொண்டவர் விஜய். விஜய் இதுவரை இறுதியாக நடித்த படங்களில் புதிய இயக்குனர்களுக்கு வாய்புக்கொடுத்து நடித்தார் பாபுசிவன் ராஜ்குமார் பரதன் பிரபுதேவா என விஜயின் இறுதியாக வந்த படங்களை இயக்கினார்கள் இவ்வாறு இருக்க இப்பொழுது விஜய் சங்கர் ராஜா முருகதாஸ் கெளதம் வாசுதேவமேனன் மணிரத்தினம் அமீர் என இயக்குனர்களுடன் இணையத்தொடங்கிவிட்டார். விஜயும் கெளதமும் ஏற்கன்வே காக்கா காக்கா படத்தில் இணைய இருந்தனர் ஆனால் விஜய்க்கு அப்படம் பிடிக்காததால் விஜய் நடிக்கவில்லை . இப்பொழுது விஜய் கெளதம் வாசுதேவமேனன் மீண்டும் சந்தித்தனர் அப்பொழுது விஜய் விருந்து கொடுத்துள்ளார் அத்துடன் புதிய படத்தில் இணைந்து பங்காற்றுவது தொடர்பாக கதைத்துள்ளனர். விஜய்க்கு ஒரு கதையை தெரிவு செய்துள்ளார் கெளதம்.இது விஜயின் படங்களிலிருந்து மாறுபட்ட படமாக இருக்கும் எனவும் விஜய் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் படம் அமையும் எனவும் கூறப்படுகிறது தற்பொழுது கெளதம் ஜீவாவை வைத்து புதிய படம் எடுக்கவுள்ளார் அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இந்தப்படம் முடிந்தவுடன் மார்ச் 2012 ம் ஆண்டு விஜயின் படத்தை இயக்கவுள்ளார். விஜயின் ரசிகர்கள் விஜய் யார் யார் படத்தில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டார்களே அவ் அவ் இயக்குனர்களுடன் விஜய் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். கெளதமின் தயாரிப்பில் வெப்பம் படமும் வர உள்ளது.விஜய் கெளதம் கூட்டணியில் இணையும் படத்தின் உத்தியோக பூர்வ அறிவுப்பு வெளிவரும் வரை இச்செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். 

விஜய் டபாங்க் பட இயக்குனரின் படத்தில் நடிக்கத்திட்டம்



Ilayathalapathy-Vijay
விஜய் டபாங்க் படத்தின் இயக்குனர் அபினவ் காஷ்யபை சந்திக்கத்திட்டம் தீட்டியுள்ளார். சென்னையில் சிறிதுகாலம் வாழ்ந்த வர் அபினவ் இவர் மணிரத்தினத்தின் படத்தின் அசிஸ்டென்ட் இயக்குனராக பணியாற்றியவர். அவர் புகழ்பெற்ற இயக்குனர் அனுரா காஷ்யப் இளைய சகோதரரும் இருக்கிறார். டபாங்க் படத்தின் பின் ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனராக மாறிவிட்டார். இவர் விஜயை வைத்து தமிழில் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார் இதனை தனது நெருங்கியவர் மூலம் விஜய்க்கு கூறிவிட்டார் விஜய் மற்றும் அபினவ் விரைவில் சந்திக்க உள்ளனர் கதை விவகாரம் பற்றிக்கலந்தாலோசிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது பாலிவூட்டில் . விஜய் அபினவ் இணையும் படம் மிக சிறப்பான படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை எனினும் விஜய் பகலவன் மற்றும் முருகதாஸ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அதன் பின்னே இப்படம் தொடங்குவது பற்றி சிந்திக்கப்படும் எனக்கூறுகிறது விஜய் தரப்பு.மேலும் இது தொடர்பான தகவலை உடனுக்குடன் வழங்குவோம் எம்முடன் இனணந்திருங்கள்.