பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Friday, July 1, 2011

விறு விறு வேகத்தில் 'பகலவன்'!

 
விஜய் நடித்த ‘வேலாயுதம்' ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அடுத்தபடியாக விஜய் யார் படத்தில் நடிக்கப்போகிறார் என கோடம்பாக்கம் முழுக்க பரபர பட்டிமன்றமே நடக்கிறது. மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பேசப்பட்ட விஜய், பட்ஜெட், கால்ஷூட் என தொடர் குளறுபடி நிகழ்வதால் அதிலிருந்து கழன்றுவிட்டார். அடுத்தபடியாய் சீமான், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரில் யாருடைய படத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்கிற பரபரப்பு கிளம்பியது. 

‘‘மூன்று பேர்களிடமும் கதை கேட்கப்பட்டது உண்மைதான். ஆனாலும் இப்போது உடனடியாக விஜய் நடிக்கப்போவது சீமானின் இயக்கத்தில்தான்!" என அடித்துச் சொல்கிறது விஜய் வட்டாரம்.

இதுகுறித்து சீமானிடம் பேசினோம். 

‘‘பகலவன் படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. சமூகம் சார்ந்த பங்களிப்பாக இந்தப் படம் விஜய்க்கு இருக்கும். முழுக் கதையையும் ரசித்துக் கேட்ட விஜய் சின்னச் சின்ன திருத்தங்களைச் சொன்னார். அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த அந்த மாற்றங்களையும் அதிரடியாகச் செய்திருக்கிறோம். ஊழல், லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, மோசடித்தனங்கள், ஏழைகள் மீது பாராமுகம் என படத்தில் தீவிரமான அரசியலைக் கையில் எடுத்திருக்கிறோம். கதைக்குத் தக்கபடி பொறி பறக்கும் வசனங்களும் தயார். விஜய்யின் வார்த்தைகளில் இருந்து அவை வெளிப்படும்போது திரையில் மட்டும் அல்ல... ஒவ்வொரு ரசிகர்களின் உள்ளத்திலும் சமூகம் சார்ந்த அக்கறை தீயாகப் பிறக்கும்! " என்கிறார் சீமான்.
படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப். முதலில் மருத்துவராக வரும் விஜய் அதன் பிறகு அதிரடியான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ஹீரோயின் தேடும் படலம் தீவிரமாக நடக்கிறது. பாலிவுட் ஹீரோயின்களை இறக்குமதி செய்யலாம் என்பது விஜய்யின் யோசனை. படத்தில் கதாநாயகிக்கு வெயிட்டான கிராமத்துப் பாத்திரமாம். அதனால், பாலிவுட் நாயகிகளால் அதை சரிவர  செய்ய முடியுமா என்பது சந்தேகம். பாவனா அந்தப் பாத்திரத்துக்கு பொருந்தக்கூடியவர் என்கிற ஆலோசனையும் நடக்கிறது. 

மங்காத்தாவுக்கு முதல் வரும் வேலாயுதம்


அஜித்தின் மங்காத்தா படத்தின் இசைவெளியீடு ஜூலை மாதம் 18 ம் திகதி இடம்பெற உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது விஜயின் வேலாயுதம் இசை வெளியீடு எப்பொழுது என்பது வேலாயுதம் படத்தின் இசையை மங்காத்தாவின் இசை வெளியீட்டுக்கு முன் நிகழ்த்தவுள்ளதாக இவ் இருபத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள சொனி மியூசிக் கூறியுள்ளது. வேலாயுதம் படத்தின் பிரதான ஆடியோ தயாராகிவிட்டது. இவ் இசை இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதனை விஜய் அன்டனி தனது பேஸ்புக்கின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். வேட்டைக்காரன் படத்துக்கு பின் விஜய் அன்டனியின் இசையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வேட்டைக்காரன் பாடல்கள் வெற்றியடைந்ததை போல் இப்படத்தின் பாடல்களும் வெற்றியடையும் எனக்கூறுகின்றன் காவலன் வெற்றியின் பின் இப்படம் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது.இப்படத்தின் இசை ஜூலையில் 15 ம் திகதி வெளியாகும் எனவும் செய்திகள் வெளிவருகின்றன.நேரு உள் விளையாட்டரங்கில் பாடல் வெளியீடு இடம்பெற உள்ளது. 

முருகதாஸ் படத்தில் இணையும் விஜய் தீபிகா ஜோடி


விஜய் எ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது.விஜய் நண்பன் வேலாயுதம் படங்களை முடித்துக்கொண்டு முருகதாஸின் படத்திலும் பகலவன் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார்.  முருகதாஸ் இயக்கும் படத்தில் கீரோயினாக நடிப்பவர் தீபிகா படுகோன் இவர் ரஜனி நடிக்கும் ரணா படத்தில் ஒப்பந்தமாகியிருந்தவரை விஜயின் படத்திலும் கீரோயின் ஆக்கியுள்ளனர். ரணாவின் பின் தமிழில் ஒரு ரவுண்டு வர இருந்த தீபிகாவை விஜய் படத்தின் பின் ரவுண்டு வர முடிவுசெய்துள்ளார் முருகதாஸ். விஜயும் முருகதாஸும் பல வருடங்களுக்கு முன் இணைந்திருக்க வேண்டும் ஆனால் அது நிறைவேறாமல் போக இப்பொழுது இணையவுள்ளனர். முருகதாஸின் பாணியில் அமையவுள்ள இப்படத்தில் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் இயக்கவுள்ளார் முருகதாஸ் விஜய் தற்பொழுது வேலாயுதம் நண்பன் படப்பிடிப்பில் உள்ளார் முருகதாஸ் ஏழாம் அறிவு படத்தின் இறுதிக்கட்ட வேலையில் உள்ளார்.  புதிய கூட்டணியான  விஜய் முருகதாஸ் கூட்டணி இவ்வருட இறுதியில் இணையவுள்ளனர். முருகதாஸ்  ஏழாம் அறிவை முடித்துக்கொண்டு அக்சய்குமாரை வைத்து ஹிந்திப்படத்தை எடுக்க இருந்தார்.ஆனால் அடுத்து விஜயை வைத்து  இயக்குவதால் ஹிந்திப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தனது தயாரிப்பில் உருவாகிவரும் எங்கேயும் எப்பொழுதும் படத்தின் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார் முருகதாஸ்.

லதாக்கில் வேலாயுதம்


விஜயின் அடுத்த படமான வேலாயுதம் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் எனக்கூறப்படுகின்ற போதும் இப்படத்தின் ஆடியோவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்கள். விஜய் ஜெனிலியா ஹன்சிகா நடிக்க ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது லதாக்கில் இடம்பெறுகிறது இப்படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறவுள்ளன.இந்தியாவுக்கு வெளியோ உள்ள இப்பிரதேச்ம இயற்கை அழகுள்ள பிரதேசமாகும் இப்படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இப்படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகளும் வேகமாக இடம்பெறுகின்றன.இப்படத்தின் பாடல் வெளியீடு இம்மாதம் நடுப்பகுதியில் இடம்பெற உள்ளது . இப்படம் நகரம் கிராமம் என நகர்வதால் அதற்கேற்ற முறையில் படத்தை படமாக்கி வருகின்றனர் .விஜய் கிராமத்து பால்காரனாகவும் ஹன்சிகா விஜயின் காதலியாகவும் ஜெனிலியா தொலைக்காட்சி ஊடகவியலாளராகவும் வருகின்றனர் .

சீமான் VS முருகதாஸ்

விஜய் அடுத்து நடிக்கும் படம் எது என்ற நிலைமை ரசிகர்களிடம் நிலவி வருகிறது ஏனெனில் விஜயின் தற்போதைய படங்கள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.விஜயின் வேலாயுதம் படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கினால் அப்படம் முடிவடைந்துவிடும். தற்பொழுது இப்படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகள் ஆரம்பமாகி விட்டன நண்பன் படமும் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விடும் என சங்கர் கூறியுள்ளார் இந் நிலையில் இக்கேள்வி நிலவி வருகிறது. விஜயை வைத்து படமெடுக்கப்போவதாக கூறியவர் சீமான் இப்படம் வேலாயுதத்தின் பின் தொடங்கவிருந்தது எனினும் நண்பன் படத்துக்கு விஜய் சென்றதால் இப்படம் தள்ளிப்போனது நண்பன் படத்தின் பின் விஜய் இப்படத்தில் நடிப்பார் என சீமான் தரப்புக்கூறியது. ஆனால் விஜய் இப்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் எனகூறப்படுகிறது சங்கரன் கோவில் படத்தின் இசைவெளியீட்டின் போது முருகதாஸ் விஜயை வைத்து இயக்க ஆவலாக உள்ளேன் எனகூறியிருந்தார்.

இவ்வாறு இருக்க விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என கேள்வி நிலவுகிறது. எ.ஆர்.முருகதாஸ் தீனா கஜனி ஹிந்தி கஜனி ரீமேக் ரமணா என படங்களை எடுத்துள்ளார் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கிட்  தற்பொழுது ஏழாம் அறிவு படத்தை எடுத்துவருகிறார் அதன் பின் ஹிந்தியில் இயக்க இருந்தவர் இப்பொழுது விஜய்க்காக தமிழில் இயக்க உள்ளார் எனக்கூறப்படுகிறது விஜய் முருகதாஸ் இணைந்தால் அப்படம் கண்டிப்பாக கிட் ஆகும் எனக் கூறுகின்றனர் திரையுலகினர் இவர்கள் இணையும் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளனர் பல தயாரிப்பாளர்கள்.
சீமான் தம்பி எனும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் எனினும் இவர் இறுதியாக இயக்கிய வாழ்த்துக்கள் தோல்விப்படமாக அமைந்தது. எனினும் இவர் புரட்சிகரமான கதையை விஜய்க்காக அமைத்து வைத்துள்ளார் இப்படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன எனினும் விஜய் இப்படத்தில் நடித்தால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இருக்க விஜய் எப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதை பற்றி குழம்பி போயுள்ள ரசிகர்களுக்கு விஜய் சரியான விடையை விரைவில் தர உள்ளார் அது வேலாயுதம் பட இசை வெளியீட்டன்று. விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து பகலவன் படத்தில் விஜய் அடுத்து நடிக்க இருப்பதாகவும் அதன் பின் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பகலவன் படத்தில் ஹன்சிகா பாவனாவும் முருகதாஸ் படத்தில் தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர்.