Tuesday, March 15, 2011
வேகமெடுக்கும் விஜய் படம்
வேலாயுதத்துக்குப் பிறகு பகலவன் படத்தில் நடிக்கிறார் விஜய். சீமான் சமீபத்தில் விஜய்யை சந்தித்து வசனத்துடன் கதையை சொன்ன பிறகு விஜய் முழுவதுமாக சரண்டராகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.பகலவன் பெயருக்கேற்ப ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் படம். முக்கியமாக வசனங்கள். சீமானின் மேடை முழக்கத்துக்கு இணையாக இருக்குமாம் வசனம் ஒவ்வொன்றும். ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டதால் படப்பிடிப்பை தொடங்க எந்தத் தடையும் இல்லை, ஒன்றேயொன்றை தவிர, தேர்தல்.
காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை முடித்த பின் உடனடியாக படத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். படத்தை தயாரிப்பது தாணு.
விஜய் படத்தில் ஹாலிவுட் ஆக்ஸன்: ஜாக்கி சான் ஐடியா
| இளைய தளபதியார் விஜய் அதிரடி நடிப்பில் 'வேலாயுதம்' படத்தை தயாரித்து வருகிறார் 'ஆஸ்கார்' ரவிசந்திரன். |
இந்த படத்தில் வரும் மிரட்டலான சண்டைக்காட்சியை படமாக்க தயாரிப்பாளர் ரவிசந்திரன், உலக அளவில் சண்டைக்காட்சிகளை எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட ஹாலிவுட் கலைஞர்களை தொடர்பு கொண்டுள்ளார். ஹாலிவுட்டில் ஏலியன்ஸ், ஸ்னாட்ச், டால்மேசன்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் டாம் டெல்மரிடம், வேலாயுதம் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியை இயக்கி தர கேட்டுள்ளாராம்.விசாகபட்டினத்தில், ரயில் மேல் நடக்கும் பவர் புல்லான ஆக்ஸன் சீனை டாம் 'வேலாயுதம்' படத்திற்காக த்ரில்லாக எடுக்க போகிறார். வேலாயுதம் படத்தில் டைட்டில் நாயகனான விஜய் மிரட்டும் ஆக்ஸன் அதிரடியை அமைக்க ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு அவருடைய நண்பர் ஜாக்கி சான் கொடுத்த ஐடியாதான் இது. இந்த சண்டைக்காட்சியை படமாக்க விசாகப்பட்டினத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் 'ப்ரீ-புரடக்சன்' வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். இந்தியில் அபிஷேக் பச்சான் நடிப்பில் வெளியான 'துரோணா' படத்துக்கு டாம் தான் சண்டைகாட்சிகளை அமைத்தாராம். 'வேலாயுதம்' விஜய்-'ரத்த சரித்திரம்' படத்தில் நடித்த அபிமன்யுடன் முட்டி மோதுகிற காட்சியை பரபரப்பாக படமாக்க உள்ளார்கள். |
மருத்துவராக விஜய்
| பகலவன் படம்தான் விஜய்யின் அடுத்த அரசியல் படமாக இருக்கும் போலிருக்கிறது. |
| சீமானும், விஜய்யும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தலைமையின் நிழலில் இளைப்பார வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இப்படத்தில் மருத்துவராக நடிக்கிறார் விஜய். விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தெல்லாம் பவர்புல் டயலாக் வைத்திருக்கிறாராம் சீமான். அதை விஜய் சொல்ல கேட்கும்போது கிராமபுற விவசாயிகள் அக்கறையோடு அத்தொழிலில் ஈடுபடுவார்கள் என நம்புகிறார் சீமானும். முதலில் மருத்துவராக இருக்கும் இவர், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகிவிடுவாராம். அந்த பதவியை வைத்துக் கொண்டு அவர் எடுக்கும் அதிரடிகள்தான் பகலவன் என்கிறார்கள். |

































































ஹாலிவுட்டில் ஏலியன்ஸ், ஸ்னாட்ச், டால்மேசன்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் டாம் டெல்மரிடம், வேலாயுதம் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியை இயக்கி தர கேட்டுள்ளாராம்.




