பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, March 20, 2012

துப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ சீருடையுடன் செல்கிறாராம் விஜய்!


போக்கிரி திரைப்படத்தில் விஜய் பொலீசாக இருந்த போதும், அவர் சீருடையுடன் நடிக்கவில்லை. பொதுவாக விஜய் திரைப்படங்களில் சீருடை அணிவதை தவிர்த்து வருபவர் அதாவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் துப்பாக்கியில் சீருடையுடன் நடிக்கிறார் இளைய தளபதி. இப் படத்தில் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால்: ஒரு சீனில் காஜல் அகர்வாலை அவர் பெண் பார்க்க போகிற மாதிரி காட்சியிலும் கூட இராணுவ சீருடையுடன்தான் நடித்திருக்கிறாராம் விஜய்.

Monday, March 19, 2012

மாற்றான், துப்பாக்கி படங்களின் நாயகி காஜல் அகர்வால் பேட்டி


தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவாகி வருகிற நாயகி காஜல் அகர்வால் மாற்றான், துப்பாக்கி படங்களைப் பற்றி பேட்டியளித்துள்ளார்.
கொலிவுட்டில் கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி என இரு படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இந்தப்படங்களில் வரும் நாயகி கதாப்பாத்திரம் பற்றி காஜல் அகர்வால் பேசியுள்ளார்.
சூர்யா உடன் 'மாற்றான்' படத்தில் மொடல் பெண்ணாக நடித்துள்ளேன். மாற்றான் படப்பிடிப்பு ரஷ்யா, பிரான்ஸ் உட்பட பலநாடுகளில் நடந்த போது நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன்.
இப்படத்திற்காக ரஷ்யா மொழி கற்றுள்ளேன்.
மேலும் முருகதாசின் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யுடன் நடித்துள்ளேன். இப்படத்தில் விஜய்யை காதலிக்கும் குறும்புக்காரப் பெண்ணாக என்னுடைய கதாப்பாத்திரம் அமைந்துள்ளது.
ரசிகர்கள் மனதில் இந்த வேடம் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.

Saturday, March 17, 2012

சென்னையில் பாட்டு ! 'பாங்காக்'கில் Shoot

'துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.

மும்பையில் எவ்வித தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்காக பாங்காக்கில் விஜய், காஜல் அகர்வால் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இப்பாடலை பாடியிருப்பவர் விஜய்.

இளைஞர்களின் ரசனையை  மனதில் கொண்டு  இப்பாடலுக்கு டியூன் போட்டிருக்கிறாராம் ஹாரிஸ். இரண்டு வாரங்கள் முன்னர் சென்னையில் இப்படத்தின் பாடலை தயார் செய்தவர்கள், தற்போது அதை பாங்காக்கில் படமாக்கி வருகிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், அதே நேரத்தில் தனது பாணியை கைவிடாமல் 'துப்பாக்கி'யை தயார் செய்து வருகிறாராம் முருகதாஸ்.

Tuesday, March 6, 2012

மீண்டும் விஜய்யுடன் இணைந்த ஜெய்


துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நாயகன் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் நாயகன் ஜெய்யிடம், துப்பாக்கியில் விஜய்யின் தம்பியாக நடிப்பதற்கு திகதிகள் கேட்டுள்ளார்.
நாயகன் ஜெய், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே திகதிகளை தந்துள்ளார்.
ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி திரைப்படத்தில் நாயகன் ஜெய் நடித்துள்ளார்.
தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்பு இளைய தளபதியுடன் மீண்டும் ஜெய் இணைகிறார்.

Saturday, March 3, 2012

'துப்பாக்கி'க்கு ஸ்ரீகர் பிரசாத்!

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.