ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.
இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன்.
இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. "
என்று தெரிவித்து இருக்கிறார்.
0 comments:
Post a Comment