
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார்.
தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார்.
இதையடுத்து மதுரையில் மனநலம் குன்றிய மாணவர்கள் மத்தியிலும் நாயகன் விஜய் உரையாடி, அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
அப்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,
நண்பன் திரைப்படத்தை போல இரண்டு, மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
விஜய்: ஒரு திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். நாங்கள் இரண்டாம் பட்சம் தான். எனவே கதை திருப்திகரமாக இருந்தால் நடிப்பேன்.
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
விஜய்: பிரண்ட்ஸ் திரைப்படம் போல ஒரு கதை அமைந்தால் இணைந்து நடிப்பேன்.
தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம்?
விஜய்: துப்பாக்கி என்று பதிலளித்தார்
0 comments:
Post a Comment