பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Saturday, August 27, 2011

Velayudham secret revealed



Vijay’s most awaited film Velayudham’s audio release is expected to be a gala affair as this time around Vijay along with his team has decided to give fans a treat by organizing the music release function amidst fans in Madurai on August 28.
The music for Velayudham is scored by Vijay Anthony. There are 5-6 songs in the film and each are different from one another keeping the youthful vibration intact in all the songs, says Vijay.
The actor has revealed the storyline calling it a Super Hero subject but with logic. The train fight in the film is a treat says Vijay with Hollywood stunt master Tomdelmar being roped in for the project.
The movie is produced by Aascar Films V Ravichandran, directed by Jayam Raja and Priyan has wielded the camera.

ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்


ரசனை விஷயத்தில் மதுரை எப்பவுமே ஒன் ஸ்டெப் மேலேதான். சாப்பாட்டுவிஷயத்தில் துவங்கி, சினிமாவை ரசிக்கிற விஷயத்தில் முன்னேறி அடிதடியில் ஆல் த பெஸ்ட் வாங்குகிற வரைக்கும் இவர்களின் ரசனை கொஞ்சம் தாறுமாறானது. இந்த லட்சணத்தில் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தால் என்னாகும்? மறுபடியும் ஒரு கள்ளழகர் திருவிழாவாக இருக்கும் போலிருக்கிறது விழா நடக்கப் போகும் 28 ந் தேதி.
விஜய்யுடன் நடிக்கும் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானியும் கூட நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மதுரைக்கு வர இருப்பதால், இப்பவே ரசிகர்கள் மனசில் உடுக்கை சத்தம். தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய் படம் பற்றி சில தகவல்களையும் அவர்களுக்காக கூறியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயம் இதுதான்.
பொதுவா இப்போ எல்லா படத்தையும் ஆடியோ ரிலீஸ் பண்ணுறதுக்கு முன்னாடியே இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணிடுறாங்க. தயவு செய்து என்னோட ரசிகர்கள் இதை ஆதரிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அவர்.
இந்த படத்தில் ஒரு ட்ரையின் ஃபைட் பண்ணியிருக்கிறாராம். இது விஜய்யின் பல நாள் ஆசை. இந்த படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மர் என்பவர் இந்த சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறாராம். பொதுவா ஒரு படத்தின் ஃபைட் வலிய திணிக்கப்பட்டதா இருக்கக் கூடாது. இந்த ஃபைட் கதையோடு இணைந்து வருது என்கிறார் விஜய்

நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்; மாணவ-மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர்


விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை (28-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்று ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குகிறார். விஜய் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.
 
இதுகுறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.
 
20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.
 
ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இயக்குனர் ராஜா கூறும்போது, வேலா யுதம் படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வந்துள்ளது. விஜய் பால்காரர் வேடத்தில் வருகிறார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்றார்.
 
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறும் போது, படத்தில் 5 பாடல்கள் உள்ளன. அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றார். மதுரை விழாவில் ரசிகர்கள் பெருந்திரளாக பங்கேற்று அமைதியாக நடத்த உதவும்படி விஜய் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் வேலாயுதம்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'வேலாயுதம்' . இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 27) மதுரையில் நடைபெற இருக்கிறது.

படக்குழுவினர் அனைவருமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்றுள்ளனர். படம்  வெளியீட்டு தேதி என்று பல்வேறு தேதிகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) தமிழகம் முழுவது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அனைத்திலும் " இன்று முதல் வேலாயுதம் இசை முழக்கம்! தீபாவளி தினத்தன்று வேலாயுதம் வெள்ளித்திரையில் வெடி முழக்கம்! " என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் 'வேலாயுதம்', சூர்யா நடிப்பில் 'ஏழாம் அறிவு', சிம்பு நடிப்பில் 'ஒஸ்தி' ஆகிய படங்கள் போட்டியிட இருக்கின்றன.

Friday, August 26, 2011

விரைவில் பழகவருகிறான் நண்பன்



நண்பன் படம் விஜய் இலியானா மற்றும் பலர் நடிக்க சங்கர் இப்படத்தை இயக்கினார்.இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து  98.8% முடிவடைந்துள்ளது.இதனை சங்கர் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படத்தின் அனைவரும் பங்கு பெறும் படப்பிடிப்பு முடிவடைந்ததால் விஜய் அனைவருக்கும் உணவு கொடுத்துக்கொண்டாடினர். இப்படத்தில் இன்னும் விஜய் இலியானா பங்குபெறும் ஒரு பாடலும் இன்னும் ஒரு பாடலின் அரைவாசியும் படமாக்கப்படவேண்டி உள்ளது. விஜய் 28 ம் திகதி வேலாயுதம் பட இசை வெளியீட்டில் பங்கு கொள்ள உள்ளதால் இப்படத்தின் மிகுதிப்படப்பிடிப்பு செப்டெம்பர் மாதம் முதலாம் கிழமை தொடங்க உள்ளது.தற்பொழுது வரை படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ளன.அன்டனி எடிட்டிங் வேலைகளை கவனிக்கதொடங்கியுள்ளார்.இப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் உருவாக்கி கொடுத்துள்ளார் ஹரிஸ் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் இடம்பெற உள்ளது.இப்படத்தின் பாடல்கள் செப்டெம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளனர்.நண்பன் படத்தின் படப்பிடிப்பு தளஸ்டிகளும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.