பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Saturday, March 19, 2011

நண்பன் படக்குழுவினரின் கருத்துக்கள்

நண்பன் படக்குழுவினரின் கருத்துக்கள்
விஜய் - சங்கர் சேருடன் இணைந்து பணியாற்றுவது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.படக்குழுவினர் அனைவரும் நல்ல குடும்பம் போல் உள்ளோம்.படம் மிக அருமையாக நகர்கிறது என்றார்.
ஜீவா - விஜய் சேர் சங்கர் சேர் கூட்டணி அருமையாக உள்ளது.மீண்டும் இந்த ரீமுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
சிறீகாந் - சங்கர் விஜய் கூட்டணி சிறப்பாக அமையும்.விஜய் சேர் உடைய தீவிர ரசிகன் அவருடன் இணைந்து நடிப்பது பெருமையா உள்ளது.உடம்பினை குறைத்து ரோஜா கூட்டத்தில் நடித்த சிறிக்காந்த் போல் மீண்டும் வருகிறேன்.
இலியானா - விஜய் சேர் என்றதும் ரொம்ப பயந்தேன் ஆனால் விஜய் சேர் ரொம்ப அமைதியாக பழகுகிறார் அவருடைய வெற்றி என்ன காரணம் என்பதை இப்போதே உணர்ந்தேன் சங்கர் சேர் ரொம்ப நன்றாக படத்தை நகர்த்துகிறார்.
என நண்பன் படக்குழுவினர் கருத்து கூறியுள்ளனர்.

நண்பன் ஸ்டில்கள்












Friday, March 18, 2011

இந்த வருட வசூலில் இலங்கையில் காவலன் முதலிடம்

காவலன் படம் இலங்கையிலும் 10 வாரமாக ஓடுகிறது.விஜய் நடித்து வெளிவந்த காவலன் திரைப்படம் இந்த வருடத்தின் வசூலில் முதலிடத்தில் உள்ளது.அத்துடன் இந்த வருடம் வெளியாகிய படங்களில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெயரும் காவலனுக்கே கிடைத்துள்ளது.அதிகளவான தியேட்டர்களில் வெளியிட்டாலும் 63 நாளை தாண்டி காவலன் ஓடுவது சாதனையே.இலங்கையில் எல்லா படங்களும் திரையிடப்படுவதில்லை.அப்படி திரையிட்டாலும் எல்லாப்ப்டமும் 25 நாளை இலங்கையில் கடப்பது இல்லை.விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் வசூலில் வெற்றி பெற்று 50 நாளை தாண்டி ஓடியது.எனினும் குருவியும் மனோகரா திரையரங்கில் 68 நாள் ஓடி வெற்றி பெற்றது.அழகிய தமிழ் மகன் 40 நாட்களை தாண்டியும் சுறா 30 நாட்களை தாண்டியும் வேட்டைக்காரன் 40  நாட்களை தாண்டியும் வில்லு 50 வது நாளை தாண்டியும் இலங்கையில் ஓடியது.இப்பொழுது இப்படம் 10 வது வாரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.காவலனுடன் வெளியாகிய படங்கள் அதன் பின் வெளிவந்த படங்கள் இலங்கையில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

10 வது வெற்றி வாரம்

Thursday, March 17, 2011

பிரசாரத்துக்கு நோ, அறிக்கை மட்டும்தான் விஜய் அதிரடி


வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல்.
காவலன் படம் ரீலிஸ் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடினார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும்கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சி.யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிளம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.