பொதுவாக விஜய் படங்கள் முதலில் தலைப்பு அறிவிக்கப்படும் நிலையில் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
எனவே வெகு சீக்கிரமே தலைப்பை அறிவிக்கும் முயற்சியில், பல்வேறு தலைப்புகளை இயக்குனர் யோசித்து வந்தார்.
முதலில் தலைவன் என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால் அதை ஜெ.ஜெ டிவி பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்து, துப்பாக்கியுடன் போஸெல்லாம் கொடுத்திருந்தார்.
இதனால் ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர்.
இந்தத் தலைப்புக்கு சொந்தக்காரரான சத்யா மூவீஸ் முதலில் சம்மதித்து, பின் மறுத்துவிட்டது.
பின் ரஜினியின் வேறு படத் தலைப்புகளை வைக்கலாமா... தர்மத்தின் தலைவன் தலைப்பை எடுக்க அனுமதி கோரலாமா என்றெல்லாம் யோசித்தனராம்.
ஆனால், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பும் என்பதால், வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்.
எனவே தன் படங்களுக்கு பழைய படங்களின் தலைப்பு வேண்டாம், புதியதாக யோசிச்சு சொல்லுங்கள் என ஏ.எல். விஜய்யிடம் இளைய தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.