Sunday, January 8, 2012

பலரை இணைத்த விஜயின் நண்பன்


சில காலம் முன்புவரை, சிம்புவும் ஜீவாவும் தங்களுக்குள் வம்பு வளர்த்துக்கொண்ட கதை இப்பொது முடிவுக்கு வந்திருக்கிறது. சிம்பு நடிப்பதாக கோ படத்தில் ஜிவா நடித்ததை ஒட்டி இந்த சண்டை
ஆரம்பமாகியிருந்தது. பத்திரிகைகளில் ஒருவரை மாற்றி ஒருவர் வாரிக்கொண்டிருந்தனர். கடந்த 4ம் தேதியான ஜீவாவின் பிறந்த நாளுக்கு தனது ட்விட்டரில் ஜீவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் நண்பன் படம் வெற்றி பெற வாழ்த்தியதும் நெகிழ்ந்து விட்டார் ஜீவா. அந்த ட்விட்டர் செய்தி இதுதான். ஹேப்பி பர்த் டே ப்ரதர். 'நண்பன்' ட்ரைலர் பார்த்தேன். சும்மா அசத்திட்டீங்க' படத்துல உங்க லுக்கே ரொம்ப வித்தியாசமா இருக்கு. நண்பன் வெற்றி பெறவாழ்த்துக்கள் இந்த செய்தியைப் படித்தவுடன் உடனே சிம்புவுக்கு போன்போட்ட ஜீவா, நன்றி நண்பா நான்
பேட்டிகள்ல உங்களைப்பத்தி தப்பா பேசுனதை நினைச்சி இப்ப வருத்தப்படுறேன். ஸாரி நண்பா என்றாராம்.
பிரிந்த இரண்டு பேரை இணைத்த வகையில் 'நண்பன்' நல்லவன் தான்.

0 comments:

Post a Comment