சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு ‘எடிசன் விருதுகள்’ என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு
இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கிறது.
2011-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். தனி குழு எதுவும் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யவில்லை. ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக www.edisonawards.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்கெடுப்பு நடந்து வருகிறது. தவிர, முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்களின் பேஸ்புக், யாஹூ மற்றும் கூகுள் குரூப்ஸ் ஐடிகள் பெறப்பட்டு, அவர்களுக்கு நியூஸ்லெட்டர்கள் அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது. இதுபோல பல லட்சம் நியூஸ்லெட்டர்கள் அனுப்பப்படுவதா விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் இணையதளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ் மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் டிவி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முதல் ரஜினி விருது…
இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவர் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
250 வெளிநாட்டுப் பார்வையாளர்கள்
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் ரசிகர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் தவிர, வெளிநாட்டு அமைச்சர்கள், வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே 250 பேர் பங்கேற்கவிருப்பதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் ‘மைதமிழ்மூவிஸ்’ ஜெ செல்வகுமார் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment