விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த படம் நண்பன். இப்படத்துக்கு தமிழக அரசானது வரி விலக்கு வழங்கியது. அத்துடன் இப்படம் தரமான படம் எனவும் கூறியது. அதிமுக ஆட்சியில் முதலாவதாக வரிச்சலுகை பெற்ற படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன் படக்குழு ஜெயலலிதாவிற்கு தமது நன்றியை தெரிவித்துள்ளது. இதனை தமது விளம்பரம் மூலமும் தெரியப்படுத்த உள்ளனர் படக்குழு. இந்த வாரம் வெளிவரும் நாளிதழ்களில் தமது நன்றியை தெரியப்படுத்த உள்ளனர்.
விஜய் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு சார்பாக தனது நன்றியை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்.
திமுக ஆட்சியை போல அல்லாமல் தரமான படங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது தமிழ் சினிமாவை நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம்.
0 comments:
Post a Comment