பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, January 31, 2012

இருநூறு கோடியை தொட்ட விஜயின் நண்பன்


நல்ல விமர்சனத்துடனும் நல்ல வரவேற்புடனும் வெற்றி நடை போடும் விஜயின் நண்பன் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
முதல் நாள் வசூல் 15 கோடி 
இரண்டாம் நாள் வசூல் 14.5கோடி 
மூன்றாம் நாள் வசூல் 14 கோடி 
நான்காம் நாள் வசூல் 12.6 கோடி 
ஐந்தாம் நாள் வசூல் 11.2 கோடி 
ஆறாம் நாள் வசூல் 10.4 கோடி 
ஏழாம் நாள் வசூல் 8.3 கோடி  
எட்டாம் நாள் வசூல் 7.4 கோடி 
ஒன்பதாம் நாள் வசூல் 6.4 கோடி 
பத்தாம் நாள் வசூல் 5.8 கோடி 
பதினோராம் நாள் வசூல் 4.8 கோடி 
பன்னிரண்டாம் நாள் வசூல்  4.5 கோடி 
பதின்மூன்றாம் நாள் வசூல்  4.3 கோடி 
பதினான்காம்  நாள் வசூல் 3.5 கோடி 
பதினைந்தாம் நாள் வசூல்  3 கோடி 
பதினாறாம் நாள் வசூல் 2.9 கோடி 
பதினேழாம் நாள் வசூல் 2.3கோடி 
பதினெட்டாம் நாள் வசூல் 2 கோடி 
பத்தொன்பதாம் நாள் நாள் வசூல் 1.8 கோடி 
மொத்தம் 134 கோடி 

தெலுங்கு வசூல்

முதல் நாள் வசூல் 14.2  கோடி 
இரண்டாம் நாள் வசூல் 13 கோடி 
மூன்றாம் நாள் வசூல் 12.6 கோடி 
நான்காம் நாள் வசூல்11.4  கோடி 
ஐந்தாம் நாள் வசூல் 10 கோடி 
மொத்தம் 61 கோடி 

நண்பனை சந்தோசப்படுத்தும் விஜய்


நண்பன் படம் வெளியான வேளை விஜய் சென்னையில் இல்லை தனது அடுத்த படமான துப்பாக்கி பட படப்பிடிப்பில் மும்பையில் இருந்தார். தற்பொழுது விஜய் தான் நடிக்கும் படங்களுக்கு சிறிது காலம் பிரேக் போட்டு விட்டு தற்பொழுது நண்பன் பட விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளார். தமிழ் நாடு முழுவதும் இப்படம் வெளியான தியேட்டர் சிலவற்றிற்கு செல்ல உள்ளார். 
இன்று விஜய் கோயம்புத்தூரில் உள்ள அர்சனா மற்றும் கே.ஜி தியேட்டருக்கு விஜயம் செய்துள்ளார். நாளை திருப்பூரில் உள்ள உஷா தியேட்டருக்கு விஜயம் செய்ய உள்ளார். திருப்பூர் ரசிகர்கள் இந்த தியேட்டருக்கு சென்றால் விஜயை சந்திக்கும் வாய்பை பெறலாம். அடுத்து விஜய் செல்ல உள்ள தியேட்டர் விபரங்களை உடனுக்குடன் தருவோம் இணைந்திருங்கள். 

இனிமேல் மொழிமாற்றம் கிடையாது: ஷங்கர்


இனிமேல் மொழிமாற்றுப் படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் வெளியாகி, வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மொழிமாற்றமாகும். இனிமேல் மொழிமாற்றுத் திரைப்படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பி்ல் சங்கர் கூறியதாவது, ஹிந்தியில் தயாரான 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் நண்பன் பெயரில் மொழிமாற்றம் செய்தது பெரிய சவாலாக இருந்தது.
உண்மைப்படத்தின் தன்மைகள் கெடாதவாறு படத்தை எடுக்கவேண்டும் என்று விஜய்யிடம் கேட்டேன். விஜய் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக நடித்துக் கொடுத்தார்.
3 இடியட்ஸ் திரைப்படத்தை விட நண்பன் திரைப்பட பாடல்கள் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள்.
மொழிமாற்றுத் திரைப்படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இனிமேல் மொழிமாற்று திரைப்படங்களை இயக்கமாட்டேன்.
நான் தயாரித்து பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன்.தற்போது அடுத்து தயாரிப்பதற்காக ஓர் நல்ல கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
நிறைய கதைகள் மனதில் உள்ளது, அடுத்த படம் எனது சொந்தக சிந்தனைக் கதையாகவே இருக்கும்.மார்ச் மாதத்தில் எனது அடுத்த திரைப்படம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Sunday, January 29, 2012

துப்பாக்கி திரைப்படத்தை வாங்கியது ஜெமினி நிறுவனம்


விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி.

ஏ.ஆர்.முருகாதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து நடிகர் விஜய் தன் உயர் நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

நண்பன் சிறப்பு பார்வை


 தினமலர் - விமர்சனம்
த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!

பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!

சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!

கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா! அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!

இலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல!
ஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!

நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!

ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!

ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்




-------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்


விஜய்யின் அடிதடி இல்லை, ஷங்கரின் சூப்பர் ஹீரோ சாகசம் இல்லை. இருவருமே "3 இடியட்ஸை மட்டும் மனதில் வைத்து நண்பனுக்காக கைகோர்த்திருக்கிறார்கள்.

மதிப்பெண்களுக்கும் வயதுக்கே உரிய சேட்டைகளுக்கும் இடையே மாணவர்கள் ரன் எடுக்க ஓடும் இன்ஜினீயரிங் கல்லூரிதான் கதைக்களம். இயந்திர வாழ்க்கை வாழும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் "ஆல் இஸ் வெல் என்று தட்டிக்கொடுக்க ஒருவன் வருகிறான். அவனால் இரண்டு நண்பர்களுக்கு நிகழும் இயல்பான அற்புதங்கள்தான் கதை.

சைலண்ட்டான சாதனை மாணவன் பாரிவேந்தனாக விஜய் ரசிக்க வைக்கிறார். ஆசிரியர்களிடம் சின்னச் சின்ன புத்திசாலித்தனங்களை வைத்தே விஜய் பண்ணும் கலாட்டாக்கள் வெகு சுவாரஸ்யம். தெனாவெட்டுப் பேராசிரியர் விருமாண்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய்யின் வெறித்தனமான நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும்! ஈகோ பார்க்காமல் சக ஹீரோ ஒருவருக்கு சலாம் போட்டு நடித்துள்ள இருவருக்கும் அழுத்தமான ஒரு சபாஷ்!

பெல்லி இடுப்பும் பளீர் சிரிப்புமாக வரும் இலியானா கொள்ளை அழகு.

விஜய்யோடு மோதிக்கொண்டே இருக்கும் சத்யனின் ரவுசு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தமிழ் தெரியாத சத்யனின் சொற்பொழிவில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு விஜய் குழப்புவது தமிழ் ரசிகனுக்கு அறிஞர் அண்ணா காலத்து ஐடியா. ஜீவாவின் கறுப்பு நிற அக்காவை மையமாகக் கொண்ட தமாஷில் "அங்கவை சங்கவை மேட்டர்தான் நினைவுக்கு வருகிறது. தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டில் டூயட், கிராபிக்ஸ் டெக்னிக்குகள் உள்ளிட்ட தனது ஏரியாவை நக்கலடித்துக்கொண்டே பயன்படுத்தவும் செய்திருப்பது இயக்குநர் ஷங்கரின் சாமர்த்தியம்தான்.

"அஸ்க்கு லஸ்க்கா ஈமோ பாடலில் இசையமைப்பாளர் ஹாரீஸ் வசீகரிக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ரம்மியம்.

தூக்கலான பிரச்சாரம், நாடகத்தனம் என்று அங்கங்கே உறுத்தினாலும் "நண்பன் கடைசியில் நெருக்கமான தோழனாகி விடுகிறான்.

நண்பன் - ஆல் இஸ் வெல்!

குமுதம் ரேட்டிங் - ஓகே.



------------------------------------------------------------




கல்கி விமர்சனம்


ஷங்கரின் க்ளிஷே க்ளிசரின் கலக்காத ஷங்கர் படம் - நண்பன். த்ரி இடியட்ஸின் ரீமேக். எனினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்திப் போகிற இயக்கத்தில், நிதானம் தவறாத ட்ராவிட் பேட்டிங்கின் ஆர்ப்பாட்டமில்லா அழகு. கல்வியின் பயனே திறமையை ஒளிரச் செய்வதுதான்; மங்கச் செய்வதல்ல என்ற உயிரிழையில் படம் முழுக்க ஆங்காங்கே ஹாஸ்யம் பொதிந்த சுவாரஸ்ய முடிச்சுகள்.

பத்துப் பேரை ஒரே அடியில் வீழ்த்தி, எட்டுப் பக்கங்களில் வசனம் பேசி, ஆறு பாடல்களில் துள்ளிக்குதித்து, நான்கு சண்டைக் காட்சிகளில் ரத்தம் கொதித்து, காதலி - தங்கை அல்லது அம்மா என இரண்டு பெண்களின் பாச மழையில் திணறி... ஃபார்முலாவுக்குள் வட்டமடித்த விஜய், நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நண்பன் படத்தில் சிக்கெனப் பற்றிக் கொண்டிருக்கிறார். நக்கல், நையாண்டி, குசும்பு, கும்மாளம்... என விஜய்யின் நடிப்பில் பரவச பல்ப்; உற்சாகத் தாண்டவம். நண்பர்கள் முதல் காதலியின் அக்கா வரை அனைவரிடமும் விஜய் அறை வாங்குவதை அவரது ரசிகர்கள் ரசிக்கா விட்டாலும், நடிகனாகத் தனக்குத்தானே தட்டிக்கொடுத்து நெஞ்சை நிமிர்த்த நிறைய வாய்ப்பை நண்பன் தந்திருக்கிறது. கேமராவைப் பார்க்காமல் நடிக்கச் சிரமப்படுவது மட்டும் திருஷ்டிப் பொட்டு.

இயல்பு மாறாத நடிப்பில் எடுத்த எடுப்பிலேயே, சேவாக் பேட் போல சிக்ஸர் அடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதில்லை. நண்பனிலும் அந்த டச் செம நச். நெற்றியில் திருநீறு, நெஞ்சுக்குள் பயம், இளமைக் குறும்பு, எதிர்கால கனவு... எல்லாமும் மாறி மாறிப் பளிச்சிடுகிற பாத்திரத்தை நடிப்பால் துலக்கித் துலக்கிப் பளிச்சிட வைக்கிறார்.

கேரக்டரின் உக்கிரம் தாங்கமுடியாமல் தவிப்பது ஸ்ரீகாந்துக்கு மைனஸ்தான். இன்ஜினீயரிங் வேண்டாம்; ஃபோட்டோ கிராபி போதும் என அவர் அப்பாவிடம் கலங்குவது சென்டிமெண்டுக்கு ஓகே. சத்யன் சிரிப்புக்கு உத்தரவாதம். நடிப்பின் பக்கமும் வந்து போகிறார்.

இலியானா - கவர்ச்சி காரமிளகாய். தம் இடுப்பைப் போல தக்குனூண்டு கேரக்டர். அதில் விஜய்யைக் கூடுமானவரை காதலிக்கிறார். அப்புறம் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுகிறார்... இது போதுமென ஷங்கர் சொல்லி இருப்பார் போல... அதனால் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யைக் கட்டிப்பிடித்துக் கரம் சேர்கிறார். போதும் போதுமென இதிலேயே ரசிகன் கிறங்கிப் போய் ஜென்மசாபல்யம் அடைகிறான்.

அஸ்கு லஸ்கு பாடல் யூத்களின் நேஷனல் ஆன்தம். பாடல்களில் ஹாரீஸ் ஜெயரான் காதுகளை வருடினாலும் பின்னணியில் மனம் கொள்ளைப் போகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமராவில் யார் சிக்கினாலும் அழகாகத் தெரிவார்கள் போல. உயிரற்ற காலேஜ் கட்டடங்கள்கூட உயிர்ப்பாகப் பதிவாகி இருக்கின்றன. ஆண்டனியின் கத்திரியில் ஆளுமை... ஆளுமை... கார்க்கியின் வசனம் படத்தின் சென்டர் பில்லர்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி விஜய்யைப் பற்றி ஒருத்தருக்குக் கூடவா தெரியாது? அதுவும் உற்ற தோழர்களுக்கும் தெரியாமல் இருப்பது உலகமகா பூச்சுற்றல். ஆல் ஈஸ் வெல் சொல்லு எல்லாம் சரியாகும் என்று சொல்லும் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன்... மூவரும் ஆனந்தப்படும் போதெல்லாம் அண்ட்ராயரைக் கழற்றுவது ஆல் ஈஸ் வெல்லா இயக்குனர் ஷங்கர் ஸார்? என்றாலும் சுதந்திரமான கல்வி, மனோதிடம், நம்பிக்கை இரண்டையும் வளர்த்தெடுக்கும் என்ற கசப்பான அறிவுரையை இனிப்புத் தடவி மாத்திரையாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.

நண்பன் - ஆல் ஈஸ் நாட் பேட்!

நட்சத்திரங்கள் படையெடுப்பு

செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற கர்நாடகா புல்டோசர்ஸ் முதலில் பந்து வீசியது. சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் 19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாசில் வென்ற தெலுகு வாரியர்ஸ் முதலில் பந்து வீசியது.
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்தது. தொடக்க வீரர் நிவின் பாலி ஆட்டமிழக்காமல் 46 ரன், கேப்டன் ராஜிவ் பிள்ளை 16, பிரஜோத் கலாபவன் 12 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து வென்றது. ஆதர்ஷ் 52, தருண் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

பந்து வீசும் சிவா
கன்னட தாரா, சுமலதா.
தம்ப்ஸ் அப் காட்டுகிறார் சமீரா ரெட்டி
எதிர்பார்ப்புடன் சோனியா அகர்வால்.
பேட்டி கொடுக்கிறார் விஷால். உடன் ராதிகா.
சீரியஸ் மூடில் ஜீவா.
கேரளா வெற்றிபெறாதா என்று வேண்டிக் கொள்ளும் பாவனாவுடன் லிசி பிரியதர்ஷன்
ரசிகர்களை கலகலக்க வைத்த வெங்கடேஷ்
கேரள அணி விக்ரம் சிங்குக்கு ஆறுதல் கூறுகிறார், ரியல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
கிளுகிளுப்பில் லஷ்மி ராய்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தெலுங்கு வாரியர்ஸ்

Saturday, January 28, 2012

மீண்டும் புதுப்பொலிவுடன் நண்பன்


பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் நண்பன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்படத்தில் உள்ள சில வசனங்களை மாற்றும்படி அதிகளவான கடிதங்கள் சென்றதால் எஸ்.எ.சந்திரசேகர் படத்தின் இயக்குனர் சங்கரை அழைத்து மாற்றங்களை செய்யும் படி கூறியுள்ளார். உடனே இப்படத்தில் உள்ள ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் வெட்டப்பட்டுள்ளன. 
ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் சமூகத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாலே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது. பாரி , பூரி  ககூசே  சாரி ஆகிய வசனங்களும் சென்சார் செய்யப்பட்டுள்ளன. 
இப்பம் தரமான மற்றும் மாபெரும் வெற்றி பெற்றதால் அதிகளாவான விருதுகளை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜயின் துப்பாக்கி யாருக்கு?


விஜயின் நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதனால் சந்தோசத்தில் உள்ளனர் சினிமா துறையினர். அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் துப்பாக்கி. காவலன் வேலாயுதம் நண்பன் படத்துக்கு பின் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தில் இரு நாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது பாடல்கள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. தரமான படங்களை கொடுத்து வரும் முருகதாசின் படம் என்பதாலும் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
விஜய் படங்களால் அதிக லாபம் ஈட்டப்படுவதால் இப்படத்தை வேண்ட பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஜெமினி பிலிம் நண்பன் படத்தை வெளியிட்டு அதிக லாபத்தை சந்தித்துள்ளது. அதனை போல ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் வேலாயுதம் படம் மூலம் அதிக லாபம் சம்பாதித்தன . இந்த இரு நிறுவனங்களும் துப்பாக்கி படத்தை வாங்கி வெளியிட போட்டி போடுகின்றன. ஆனால் இப்படத்தை யாருக்கு விற்பது என கலைபுலி தாணு முடிவு செய்யவில்லை. இப்படத்தை யார் வெளியிடுவார்கள் என தெரியவில்லை. இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் வாங்கியுள்ளது எனக்கூறப்படுகிறது. உண்மையை விரைவில் வெளியிடுவம் இணைந்திருங்கள். 

பிரமாண்டமாக நடைபெறும் துப்பாக்கி கிளைமாக்ஸ்


துப்பாக்கி படத்தில் விஜய் காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை முருகதாஸ் தயாரிக்கிறார். இசை ஹரிஷ் ஜெயராஜ். தயாரிப்பு கலைப்புலி தாணு. நண்பன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய விஜய் நண்பன் சங்கர் படம் என்பது போல துப்பாக்கி முருகதாஸ் படம் என்றார். இப்படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு முடிந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட் படமாக உள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஏழு கமராவுடன் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அறுபது சண்டை கலைஞ்ர்களுடன் விஜய் நடிக்கும் சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. சந்தோசிவன் இப்படத்தின் படப்பிடிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்துக்கு வசனம் ஜெய மோகன். அந்தோணி இப்படத்தின் எடிட்டராக பணியாற்றுகிறார். இப்படத்தின் அடுத்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. 

நண்பன் படத்துக்கு பிறகு சம்பள உயர்வு


நண்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு பாலிவுட் படத்திலும் இலியானா நடித்து வருகிறார்.


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் உடன் இலியானா இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நண்பனின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பன் படத்தில் நடிக்கும் போதே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்று இலியானா பரபரப்பாக பேசப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கோடிக்கு குறைவாக இலியானா சம்பளம் வாங்குவதில்லை என்று பட புள்ளிகள் கூறுகிறார்கள்.

Friday, January 27, 2012

Nanban Latest Still












2012-ம் ஆண்டின் முதல் ஹிட்!


எஸ்.எம்.எஸ், காலர்ட்யூன், ஃபேஸ்புக் என்று நண்பர்களுக்கிடையே பிரபலமாகி வரும் வார்த்தை 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' என்பதுதான். இந்த் ஆண்டின் மெகா ஹிட் படமான 'நண்பன்' படத்தில் விவேகா எழுதிய இந்த பாடல்தான் இந்த ஆண்டின் முதல் ஹிட் பாடலாகும். 'நீ வருவாயா என' படத்தில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா, தொடர்ந்து பல வெற்றி பாடல்களை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு அதிகமான ஹிட் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையை தட்டிச் சென்ற இந்த இளம் பாடலாசிரியர், இந்த ஆண்டும் அந்த பெருமையை தட்டிச் செல்ல, 'மாற்றான்', 'சிங்கம்-2', 'சகுனி', 'அரவான்', 'கரிகாலன்', 'வல்லினம்' உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதிவருகிறார்.
'நண்பன்' படத்தில் தான் எழுதிய 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' பாடல் பெற்றிருக்கும் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் விவேகா, இந்த வெற்றி அனுபவத்தை பற்றி கூறும் போது, "நண்பன் பெரிய படம். ஷங்கர் சார் மாபெரும் இயக்குநர். அவர் பெயரை சொன்னாலே அகில இந்திய வியாபாரம் ஆகிவிடும் அந்த அளவுக்கு வணிக மதிப்புள்ள இயக்குநர். அதே போல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு பாடலையும் வெற்றிப் பாடலாகக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ் போன்ற நட்சத்திர பலம். இப்படி இயல்பாகவே படத்தின் பிரமாண்டம் பெரிதாகிவிட்டது. படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையை பிரமாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இது தான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார். தற்போது தனது பாடல்களின் தொகுப்பை பத்திரிகை ஒன்றில் கட்டுரையாக எழுதும் விவேகா, விரைவில் ஐந்து புத்தகங்களை வெளியிட இருக்கிறார். 

Thursday, January 26, 2012

ஜாலீஸ் ஜெயராஜ்

நண்பன் படத்தின்  பாடல்களும் பின்னணி இசையும் இந்தி திரி இடியட்ஸை விட நன்றாக இருந்தது என்று இந்தி பட டீம் பாராட்டியதாக விஜய் வெளியிட்ட செய்தியால் ஹாரிஸ் செம ஜாலி மூடுக்கு வந்துவிட்டார். இந்திப்பட டைரக்டர் ஹிராணி அவ்வாறு சொன்னதாக
விஜய் சொல்லித்தான் நான் செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். என்னைப்  பொறுத்தவரை 'நண்பன்' படத்தில் விஜய் பேசும் டயலாக்கான வெற்றியை நோக்கி ஓடாதே. பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து கடுமையாக உழை வெற்றி தன்னால வரும். இதுதான் என் கருத்தும்.மத்தவங்க பாராட்டனுமேன்னு ஒரு பாட்டை உருவாக்க முடியாது.ஒரு டியூனை நாமளே ரசிச்சி, ருசிச்சி கம்போஸ் பண்ணி பாடலா கொண்டு வந்தா தன்னால பாட்டு ஹிட் ஆகும். சமீபகாலமா 
யாரைப்பார்த்தாலும் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையப்போறீங்களான்னு கேக்குறாங்க. நான் அதைப்பத்தி யோசிக்கிறதில்லை. துப்பாக்கி, மாற்றான், இரண்டாம் உலகம்னு என்னோட இசை உலகம் பிஸியாப் போயிட்டிருக்கு என்று சூசகமாய் பதில் சொல்கிறார் ஹாரிஸ்.

விஜய்யை புகழ்ந்த சத்யராஜ்


இளையதளபதி விஜய் கன்னத்தை கிள்ளிப் பார்க்க ஆசைப்படுவதாக சத்யராஜ் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கும் நண்பன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நண்பன் திரைப்படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நாட்டின் தலைசிறந்த நடிகர் அமீர்கான். திரி இடியட்ஸ் திரைப்படத்தில் அமீர்கானின் நடிப்பை விட நண்பனில் விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை போல விஜய் அழகான நடிகராக திகழ்கிறார். அவருடைய கன்னத்தை கிள்ளிப்பார்க்க நான் அவ்வப்போது ஆசைப்படுவேன் என்று கூறியுள்ளார்.
நண்பன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு அதிகமான சந்தோஷத்தை அளித்துள்ளதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு போக்கிரி திரைப்பட விழாவில் இந்தியாவின் புருஸ்லி என்று விஜய்யை சத்யராஜ் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா செல்லும் விஜய்


விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த நண்பன் படம் மாபெரும் வெற்றியுடன் தமிழகம் மற்றும் கேரளா மற்றும் ஏனைய நாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் மற்றும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தெலுங்கில் இன்று வெளியாகிறது. ச்நேஹிதுடு எனும் பெயரில் வெளியாகிறது.
இப்படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு தரமான படமாக வந்துள்ளது. இப்படம் தொடங்கும் போது பலர் இப்படம் பற்றி தவறான விமர்சனம் சொன்னனர் எனினும் அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளது நண்பன். இப்படத்தில் தெலுங்கு பாடல்கள் அண்மையில் கைதரபாத்தில் வெளியிடப்பட்டன. அங்கு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இலியான சத்தியராஜ் சத்தியன் ஜீவா சிறிகாந்த் அனுஜா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. நண்பன் ஹிந்தி மற்றும் தமிழில் வெற்றி பெற்றதை போல தெலுங்கிலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். 

Wednesday, January 25, 2012

வெற்றி வழியில் விஜய்


விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்கள் வரவேற்பை பெறாத போதும் விஜய் நடிப்பில் இறுதியாக வந்த மூன்று படங்கள் அமோக வெற்றி பெற்றன. காவலன் பல எதிர்பின் மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்றது. வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நூறுநாளை தாண்டி ஓடியது. அடுத்து வெளிவந்த வேலாயுதம் படமும் நல்ல வரவேற்பை பெற்று இன்னமும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. நண்பன் படம் வெளிவந்து மெகா ஹிட் ஆகியுள்ளது. இவ்வாறு மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று ஹற்றிக் நாயகனாக விஜயை மாற்றியுள்ளது. இம்மூன்று படமும் வேறுபட்ட கதையை கொண்ட படங்களாகும். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத மூன்று படமாகும். இம்மூன்றும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தவிர இனி வர உள்ள மூன்று படமும் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூன்று படங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத படங்களாகும். துப்பாக்கி யோகன் மற்றும் இயக்குனர் விஜயின் படம் என்பனவாகும். விஜய் வெற்றி நாயகன் என அறிந்த நிலையிலும் இப்படங்களும் விஜயின் வெற்றிக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. 

நண்பன் திரைப்படத்தில் என்னுடைய பாணியில் நடித்தேன்


நண்பன் திரைப்படத்தில் கரினா கபூர் பாணியை பின்பற்ற வில்லை என்று இலியானா தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகி இலியானா நடித்துள்ளார்.


நண்பன் திரைப்படத்தை பற்றி நாயகி இலியானா, நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.
பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழாக்கமே நண்பன் என்றாலும் படத்தில் நடிப்பதற்காக 3 இடியட்ஸ் படத்தை பல தடவை பார்த்தேன். ஆனால் அதில் நடித்த கரீனா கபூர் நடிப்பை காப்பி அடித்து நடிக்க வில்லை.
கரினா கபூர் பாணி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் நண்பர்கள் கரீனா கபூருடன் ஒப்பிட்டு பேசவில்லை. என் பாணியில் நடித்திருப்பதாக என்னை பாராட்டினார்கள்.
கொலிவுட்டில் கேடி படத்துக்கு பின் 5 ஆண்டுகளுக்கு பின்பு நல்ல கதை அமைந்ததால் நண்பனில் நடித்தேன்.
இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் திறமையானவர். அனுஷ்கா உட்பட சக நடிகைகளிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, January 24, 2012

விஜய்யின் ‘நண்பன்’ 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்


விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின் டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
விஜய் மட்டுமல்லாமல் ஜீவா, ஸ்ரீகாந்தக், சத்யன், சத்யராஜ் என மற்ற கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள் திரையுலகினர்.
விஜய் பட வசூல் குறித்து இதுவரை படத் தயாரிப்புத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் பத்து நாட்களில் ரூ. 110 கோடி வசூல் என்ற பேச்சே அந்தப் படத்திற்கு இன்னொரு விளம்பரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Monday, January 23, 2012

நன்றி தெரிவித்த நண்பன் படக்குழு


விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த படம் நண்பன். இப்படத்துக்கு தமிழக அரசானது வரி விலக்கு வழங்கியது. அத்துடன் இப்படம் தரமான படம் எனவும் கூறியது. அதிமுக ஆட்சியில் முதலாவதாக வரிச்சலுகை பெற்ற படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது. 
நண்பன் படக்குழு ஜெயலலிதாவிற்கு தமது நன்றியை தெரிவித்துள்ளது. இதனை தமது விளம்பரம் மூலமும் தெரியப்படுத்த உள்ளனர் படக்குழு. இந்த வாரம் வெளிவரும் நாளிதழ்களில் தமது நன்றியை தெரியப்படுத்த உள்ளனர். 
விஜய் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு சார்பாக தனது நன்றியை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார். 
திமுக ஆட்சியை போல அல்லாமல் தரமான படங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது தமிழ் சினிமாவை நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம். 

Sunday, January 22, 2012

நண்பனால் சந்தோசமடைந்த விஜய்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். 

நண்பன் படத்தில் விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்


நண்பன் படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா இணைந்து நடித்துள்ளனர். கிளைமாக்சில் விஜய்யை ஸ்ரீகாந்தும் ஜீவாவும் அடிப்பது போல் காட்சி உள்ளது. இதற்காக இருவர் மீதும் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:- 
விஜய்யை நானும், ஜீவாவும் அடிப்பது கதைக்கு தேவைப்பட்டது. முதலில் அடிக்க தயங்கினேன். ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகம் கிளப்பினேன். விஜய் அந்த காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்று சொல்லி எங்கள் தயக்கத்தை போக்கி நடிக்க வைத்தார். 
படம் ரிலீசான பிறகு விஜய் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை. ஆத்திரப்படவும் இல்லை. மாறாக போன் செய்து பாராட்டினார்கள். படப்பிடிப்பில் மூவரும் ஜாலியாக இருந்தோம். 
விஜய் வேட்டைக்காரனாகவும் ஜீவா சேட்டைக்காரனாகவும் இருந்தனர். ஜீவாவுக்குள் வடிவேலுவும் சந்தானமும் இருக்கின்றனர். அந்த அளவு தமாஷ் பண்ணுவார். இரு நூறு பேர் மத்தியில் பேன்ட்டை கழற்றி நடிக்க நேர்ந்த போது கஷ்டமாக இருந்தது. மூன்று ஹீரோக்கள் படமாக இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு இருந்தது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சீன்களும் அமைந்தன. 
சிறந்த நடிப்பை வெளிப்படுத்த நல்ல இயக்குனர் அமைய வேண்டும். நண்பன் படத்தில் ஷங்கர் கிடைத்தார். ஷங்கர் சிறந்த நடிகர். ஒவ்வொரு கேரக்டரையும் நன்றாக செதுக்கினார். அவர் சொல்லி கொடுத்தபடி நடித்தேன். 
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

நண்பன் பற்றி இளையதளபதி விஜய் பேட்டி


நான் நடிக்கும் திரைப்படங்களில் தேவையில்லாமல் அதிரடியான பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன் என்று நண்பன் நாயகன் விஜய் பேட்டியளித்துள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் நடித்து திரையரங்குகளில் நண்பன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நண்பன் திரைப்படத்தைப் பற்றி இளையதளபதி விஜய், நண்பன் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. எனது முந்தைய படங்களை விட வசூலில் சாதனை படைப்பதாக தகவல் வருகிறது.
பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் பார்த்த பிறகே நண்பனில் நடிக்க விரும்பினேன். நண்பனில் பஞ்ச் வசனங்களோ அதிரடி சண்டை காட்சிகளோ கிடையாது. என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன்.
அது நண்பன் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. என் படங்களில் தேவையில்லாத பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். நண்பன் மூலம் ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோர் நண்பர்களாகி விட்டனர்.
தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும்.
எனது அப்பா என்னை வைத்தியராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கட்டில் ஆர்வம் இருப்பதால் அவனை கிரிக்கட்டிற்கு அனுப்ப முயற்சி செய்வேன்.
தற்போது துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமாணத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வர் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, January 21, 2012

100 கோடியை தொட்ட விஜயின் நண்பன்

விஜய் நடிப்பில் தை பன்னிரண்டாம் திகதி வெளிவந்த படம் நண்பன் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
நண்பன் முதல் நாள் வசூல் 15 கோடி
நண்பன் இரண்டாம்  நாள் வசூல் 14.5 கோடி
நண்பன் மூன்றாம்  நாள் வசூல் 14 கோடி
நண்பன் நான்காம் நாள் வசூல்13  கோடி
நண்பன் ஐந்தாம் நாள் வசூல் 12 கோடி
நண்பன் ஆறாம் நாள் வசூல் 10.2 கோடி
நண்பன் ஏழாம் நாள் வசூல் 8.3 கோடி
நண்பன் எட்டாம் நாள் வசூல் 7.4 கோடி
நண்பன் ஒன்பதாம்  நாள் வசூல் 6.4 கோடி
ஒன்பது நாளில் இப்படம் 99.8 கோடி வசூலித்துள்ளது. 

நண்பன் வசூல்

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது விஜ்ய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்த நண்பன் படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய இந்த படத்திற்கு முதல் நாளில் இருந்தே திரையிட்ட இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. நண்பன் படத்தின் முதல் நாள் கலெக்க்ஷன் சுமார் 15 கோடி எனவும் கடந்த 5 நாட்களில் நண்பன் படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. எனினும் இந்த கலெக்க்ஷன்  பற்றி படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இதுவரை எதுவும் சொல்லவில்லை.

விஜய் அஜித்துக்கு ஒரே வில்லன்


வித்யுத் ஜம்ம்வல் என்பவர் காக்க காக்க ஹிந்தி பட ரீமேக் வில்லன். இவர் விஜய்  அஜித்  படங்களுக்கு வில்லனாக நடிக்கிறார். அஜித்தின் பில்லா இரண்டு படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து விஜயின் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். இவ்விரு படங்களிலும் நடிப்பதால் நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார் வித்யுத். முருகதாஸ் கஜனி மற்றும்  ழாம் அறிவு படத்திலும் அறிமுகப்படுத்திய வில்லன்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Friday, January 20, 2012

பொங்களில் வென்ற விஜய்


இந்த வருடம் விஜய் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய வருடமாக தொடங்கியுள்ளது. தை மாதத்தில் வெளியாகிய இரண்டு பெரிய திரைப்படங்களை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. நண்பன் மற்றும் வேட்டை ஆகியனவே அத்திரைப்படங்களாகும். ஜெமினி நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து நண்பன் படத்தை வாங்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி என ஏற்கனவே அறியத்தந்தோம். 
இப்பொழுது லிங்குசாமியின் வேட்டை திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் ரி.வி வாங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களாகும். விஜய் ரி.வி வித்தியாசமான படங்களை வழங்கும் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

குடியரசு தின நண்பன் ஸ்பெஷல்


நண்பன் படம் முதல் வாரம் நல்ல வசூலை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் இரண்டாம் வாரமும் நல்ல வசூலை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பன் குழுவுடன் பேட்டி எடுக்க பல தொலைகாட்சிகள் நிகழ்சிகளை ஒழுங்குபடுத்திய போதும் சங்கர் மற்றும் விஜய் சிறிகாந்த் ஜீவா ஆகியோர் ஒத்துக்கொண்டது விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காகும். இந்த நிகழ்ச்சி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்சி இந்தியாவின் குடியரசு தினத்தன்று ஒளிபரப்பப்பட உள்ளது. 

துப்பாக்கியில் இன்னோரு தோட்டா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

'ஸ்மாக் தட்' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் அகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான 'ரா.ஒன்' படத்தில் 'சம்மக் சலோ..' என்ற பாடலை பாடினார்.  அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.

மும்பை வழியே சென்னைக்குள்ளும் நுழைகிறது அகான் குரல்.  அகான்  'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடல் பதிவு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ரா.ஒன் 'சம்மக் சலோ' பாடலைவிட  அதிகமாக இப்பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறாராம் ஹாரிஸ். 

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ், அகான் என தோட்டாக்களை நிரப்பி வருகிறது 'துப்பாக்கி'

விஜய் வேடத்தை மாற்றிய இயக்குனர் முருகதாஸ்


இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கொலிவுட்டில் இளையதளபதி விஜய், முருகதாஸ், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கி படம் வேகமாக உருவாகி வருகிறது.

துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு துப்பாக்கியை தயாரிக்கிறார்.
இந்தப்படத்துக்காக நாயகன் விஜய்யின் வேடத்தை இயக்குனர் முருகதாஸ் மாற்றியுள்ளார்.
இந்தப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை வானகரம் சந்தையில் சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தன்னுடைய படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடாது என்பதற்காக, பணிகளை வேகமாக விஜய் முடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thursday, January 19, 2012

ஸ்ரீகாந்தின் நண்பன்

ஷங்கரின் நண்பனின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். த்ரீ இடியட்ஸை ஷங்கர் சார் தமிழில் இயக்கப்போகிறார் என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்த உடனேயே ஷங்கர் சாரை நேரில் சந்தித்து எனக்கும் ஏதாவது ஒரு இடியட்டா நடிக்கவாய்ப்பு கொடுங்க சார்ன்னு கேக்கலாமுன்னு நினைச்சிட்டிருந்தப்ப அதுக்கு அவசியமே இல்லாம ஷங்கர் சார் ஆபிசுலருந்து போன் வந்து எனக்கு மாதவன் நடிச்ச கேரக்டர் நடிக்க சான்ஸும் வந்தது. இந்த கேரக்டர்ல மாதவன் சார் இந்தியில எப்படி பண்ணியிருந்தார்னு இப்ப வரைக்கும் பாக்கல. நண்பன் ஷூட்டிங் ஸ்பாட்டுல எனக்கு நெருக்கமான நண்பன் யார்னு கேட்டா படத்தோட கேமராமேன் மனோஜ் பரமஹம்சாவைத்தான் சொல்வேன். ஏன்னா என்னோட 'பம்பரக்கண்ணாலே' படத்துக்கு மனோஜ் தான் இணை ஒளிப்பதிவாளர். அந்த நட்பை மறக்காம எனக்கு படப்பிடிப்பு முழுக்கவே நல்ல கம்பெனி கொடுத்தார் மனோஜ் என்கிறார் ஸ்ரீகாந்த்.