Monday, December 27, 2010

இலங்கையில் “பேஸ் புக்” ஊடாக பண மோசடி என எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்கள், இணையத்தள அத்துமீறிய ஊடுருவலாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தள ஊடுருவலாளர்கள், பேஸ் புக்கில் அழகான பெண்களையும் படங்களையும் திடகாத்திரமான ஆண்களின் படங்களையும் பிரசுரித்து அதிக பணத்தை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பேஸ்புக் பாவனையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளுக்கு சென்று அதில் ஊடுருவுவதன் மூலம் கப்பங்களை கோரிவருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை கொம்பியூட்டர் அவசர சேவைகள் குழு பேஸ் புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக்குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தநிலையில் இவ்வாறான இணையத்தள ஊடுருவலாளர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளதாக அவசர சேவைகள் கொம்பியூட்டர் குழு குறிப்பிட்டுள்ளது.
எனவே பேஸ் புக் பாவனையாளர்கள் தமக்கு தெரியாதவர்களின் தொடர்புகளை பேஸ் புக்கில் பேணவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comments:

Post a Comment