அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, பிரபல திரைப்பட நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் சந்தித்து பேசினார்.
விஜய் நடித்த, “காவலன் திரைப்படம் வெளியிடுவதில், நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்தே அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, விஜயின் தந்தை சந்திரசேகர் சந்தித்ததாகவும் அ.தி.மு.க., செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த சந்திப்பு காவலன் படப்பிரச்சனைக்கான சந்திப்பு இல்லை என்றும், அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ள உள்ள நிலையில் ஜெ., – சந்திரசேகர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment