இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத சாதனை அளவாக, இதுவரை வெளியான 100 நேரடி தமிழ் படங்களில் 53 ஹீரோக்களும், 60 ஹீரோயின்களும் அறிமுகமாகி உள்ளனர்.
பொதுவாக, ஒரு ஆண்டில் 100 முதல் 110 படங்கள் வரைதான் வெளிவரும். இதில் குறைவான எண்ணிக்கையில் புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள் அறிமுகமாவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் அறுபதை எட்டியது.
இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் தவிர்த்து இதுவரை 100 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் 53 ஹீரோக்களும், 60 ஹீரோயின்களும் அறிமுகமாகி உள்ளனர். நிறைய கனவுகளோடு அறிமுகமாகியிருக்கும் இவர்களில் சிலரே அடுத்த பட வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஒரு சிலர் அடுத்த வாய்ப்பு பெறாவிட்டாலும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்த ஆண்டு அறிமுகமான 60 புதுமுகங்களில் சாரா (தீராத விளையாட்டு பிள்ளை) இந்தியிலிருந்தும், மடால் ஷா (தம்பிக்கு இந்த ஊரு) தெலுங்கிலிருந்தும், ஹரிப்ரியா (கனகவேல் காக்க) கன்னடத்திலிருந்தும் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளனர். எமி சான்சன் (மதராச பட்டினம்), சமந்தா (பாணா காத்தாடி), மேக்னா சுந்தர் (காதல் சொல்ல வந்தேன்), திஷா பாண்டே (தமிழ் படம்) ஆகியோர் தங்கள் நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்கள் தவிர நந்தகி (அவள் பெயர் தமிழரசி), அஸ்வதா (திட்டக்குடி), ஷிகா (கொல கொலயா முந்திரிக்கா), தாமரை (ஒச்சாயி), அருந்ததி (வெளுத்துக்கட்டு) ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர்.
அறிமுகமான 53 ஹீரோக்களில் அருள்நிதி (வம்சம்), அதர்வா (பாணா காத்தாடி), ஆகியோர் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தனர். இவர்கள் தவிர ஹரிஷ் கல்யாண் (சிந்து சமவெளி), பாலாஜி (காதல் சொல்ல வந்தேன்), விதார்த் (தொட்டுப்பார்), ஹரிஷ் (மாத்தியோசி), கதிர் (வெளுத்துக்கட்டு), ஆகியோர் கவனம் ஈர்த்தனர்.
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதுள்ள சூழ்நிலையை கணக்கிடும் போது இன்னும் 15 ஹீரோக்களும், 20 ஹீரோயின்களும் அறிமுகமாவார்கள். வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 150&ஐ தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment