Sunday, November 7, 2010

ரஜினியின் அண்ணாமலை பாட்டுப்பாடி பசு தானம் கொடுத்த விஜய்!

ஜினியின் அண்ணாமலை படத்தில் வரும் ‘வந்தேன்டா பால்காரன்…’ பாடலைப் பாடி., ஏழை விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 108 பசுக்களை தானமாகக் கொடுத்தார் நடிகர் விஜய்.
வேலாயுதம் படப்பிடிப்புக்காக கோவை உடுமலைப் பேட்டையில் தங்கியுள்ளார் விஜய். இந்தப் பகுதியில் உள்ள ஏழை விவசாயிகள் 108 பேருக்கு கறவை மாடுகளை தீபாவளிப் பரிசாக வழங்கினார்.

இதற்காக விழாவில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். விழாவில் பேசிய விஜய், ‘வந்தேன்டா பால்காரன் பசு மாட்டைப் பத்தி பாடப் போறேன்…’, என்ற பாடலைப் பாடினார். ‘புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…’ என்ற வரிகளை அவர் பாடியபோது, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் ‘உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க’ என்று கோஷமெழுப்பினர்.
தொடர்ந்து பேசிய விஜய், “ஒரு பசுமாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைக்கும் என்பார்கள். இதைத்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ‘சம்சாரி வாழ்க்கைக்கு ஒரு பசுமாடு’ என்றார்.
  
புல்லுகொடுத்தா பாலு கொடுக்கும், பாதிப்புள்ளை பொறக்குதப்பா பசும்பாலை நம்பி என தலைவர் ரஜினி கூறியிருக்கிறார்.
தானத்தில் சிறந்து பசுதானம் என்று புராணங்களும் கூறுகின்றன. அதனால்தான் எனது தீபாவளிப் பரிசாக பசுவை தானமாகத் தந்துள்ளேன்.
இது விவசாய நாடு. ஆனால் விவசாயத்தில் போதிய வருமானமில்லாததால், அந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரவேண்டும். இன்று என்னால் முடிந்த அளவு 108 விவசாயிகளுக்கு பசுக்களை வழங்குகிறேன்” என்றார்.

0 comments:

Post a Comment